முடி உதிர்தலை தடுத்து பலன் தரும் அருமையான குறிப்புகள்!!

Written By:
Subscribe to Boldsky

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

Ayurvedic remedies to control hairfall

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். அவ்வாறன பலன் தரும் வைத்தியங்கள் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எள்ளு இலைகள் :

எள்ளு இலைகள் :

எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கத் தொடங்கும்.

கசகசா :

கசகசா :

கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

மருதாணி

மருதாணி

தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம்.

 கருவேப்பிலை எண்ணெய் :

கருவேப்பிலை எண்ணெய் :

கறிவேப்பிலையை நைசாக அரைத்து, சிறு சிறு உருண்டையாக்கி வெயிலி காய வையுங்கள். பின்னர் நன்றாக காய்ந்த பின் தலைக்கு குளிக்கும் நாட்களில், நீங்கள் விருப்பப்பட்ட எண்ணெயை சூடுபடுத்தி அதில் ஒரு உருண்டையை போட்டு காய்ச்சுங்கள்.

இந்த எண்ணெய்க் கொண்டு மசாஜ் செய்து குறைந்தது 1 மணி நேரம் இருந்து தலைக்கு குளியுங்கள். இபப்டி செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

வெந்தயம் கடலைபருப்பு :

வெந்தயம் கடலைபருப்பு :

வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து ஊற வையுங்கள். பின் இந்த இரண்டையும் தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic remedies to control hairfall

Ayurvedic remedies to control hairfall
Story first published: Saturday, April 15, 2017, 8:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter