அழகான முடி வேண்டுமா? முதல்ல நீங்க இத ஃபாலோ பண்ணனும்.

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

பளபளக்கும் முடியே அழகுக்கு ஒரு மணிமகுடமாக திகழ்கிறது.முடியின் நீளமானது பாலினம் (ஆண்/பெண்), வயது இதன் அடிப்படையைச் சார்ந்தே உள்ளது.முடியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்தாலே பார்க்க அழகாக இருக்கும்.ஆனால் இந்த வயதில் சுற்றுப்புற மாசு மற்றும் மன அழுத்தத்தினால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

மன அழுத்தம் மற்றும் சுற்றுப்புற மாசு இவை இரண்டும் தான் முடியின் வளர்ச்சிக்கு எதிரிகள்.ஆனால் மாசினால் ஏற்படும் அழுத்தத்தை தவிர்க்க முடியாது.எனவே இவை முடியை சேதப்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 முறைகளை பின்பற்றி முடியை சேதமடையாமல் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முறை 1:

முறை 1:

முதலில் உங்களுடையது எந்த வகையான முடி என்று கண்டுபிடியுங்கள்.இது மிகவும் முக்கியமானது ஏனெனில் இதன் அடிப்படையில் தான் முடியைப் பராமரிக்கத் தேவையானப் பொருட்களைப் பயன்படுத்த முடியும்.

எண்ணெய் பசை அதிகம் உள்ள முடிக்கு எண்ணெய் பசை உள்ள பொருட்களை பயன்படுத்துவது மேலும் பிரச்னையை ஏற்படுத்தும்.அதுமட்டுமின்றி எந்த வகையான ஸ்கல்ப் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் எண்ணெய் பசை உள்ள ஸ்கல்ப்,உலர்ந்த/வறண்ட முடியைக் கொண்டிருக்க சாத்தியங்கள் அதிகம்.

முறை 2:

முறை 2:

ஸ்கல்ப் மற்றும் முடியின் வகை இதை கண்டுபிடிப்பதன் அடிப்படையில் முடி பராமரிப்புக்கு உகந்த பொருட்களை உபயோகிக்கலாம்.

நீங்கள் முடிக்கு தேவையான சரியான பொருட்களை கண்டுபிடித்து உபயோகிப்பதன் மூலமும் மற்றும் முடியை சுத்தமாக பராமரிப்பதன் மூலமும் முடியை பராமரிக்க அதிக நேரம் எடுக்காமல் பாதுகாக்கலாம்.

இது மிகவும் முக்கியமான பரிந்துரை ஆகும்.சுற்றுப்புற மாசுக்களில் இருந்து முடியை பராமரிக்க தொடர்ந்து முடியை சுத்தமாக அலச வேண்டும்.

 முறை 3:

முறை 3:

கடுமையான,ரசாயன,செயற்கைப் பொருட்களை உபயோகிப்பதை விட இயற்கையான ஹெர்பல் பொருட்கள் உபயோகிக்கலாம்.ஏனெனில் ரசாயனம் கலந்த பொருட்கள் முடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு பதிலாக ஆரோக்யத்தைக் கெடுக்கிறது.

உங்களுக்கு பொடுகு பிரச்சனை (அ) நாளுக்கு 80-100 முடிக்கு மேல் உதிர்ந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி பரிந்துரை செய்ய வேண்டும்.

முடி உதிர்வதால் ஏற்படும் அழுத்தம் பிரச்னையை இன்னும் அதிகமாக்கும்.எனவே சொந்த முயற்சி எடுக்க விரும்பினாலும்,தொழில்முறை பயின்றவர்களிடம் உதவி பெறுவது நல்லது.

 முறை 4:

முறை 4:

ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்,தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு தினமும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றினால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம், இரவில் நிம்மதியாக தூங்கலாம்.இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் முடியை சென்றடையும்.

கூந்தல் ஆரோக்கியம் :

கூந்தல் ஆரோக்கியம் :

இந்த 4 முறைகளை பின்பற்றினால் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சியை உங்களால் உணர முடியும்.இதனால் உங்கள் பளபளப்பான,ஆரோக்கியமான முடியின் மீது நீங்களே காதல் கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

4 Step process reveals the secret to get beautiful hair

4 Step process reveals the secret to get beautiful hair
Story first published: Monday, March 6, 2017, 12:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter