பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில கிராமத்து வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பொடுகு ஒரு தொல்லை தரும் ஒரு பெரும் பிரச்சனை. இதனால் நிறைய மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். பெரும்பாலும் பொடுகு தலையில் எண்ணெய் பசை அளவுக்கு அதிகம் இருந்தால், அதிகமாக வறட்சி ஏற்பட்டால் அல்லது கெமிக்கல்களை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும்.

அதிலும் தற்போது நிறைய பேர் தலைக்கு குளிக்கும் போது கெமிக்கல் மிகுந்த ஷாம்புவை அதிகமாக பயன்படுத்துவதால், ஸ்கால்ப்பில் வறட்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையால் கஷ்டப்பட வேண்டியுள்ளது. மேலும் தலையில் பொடுகு அதிகம் இருந்தால், தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.

எனவே பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில கிராமத்து வைத்தியங்களை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராமத்து வைத்தியம் #1

கிராமத்து வைத்தியம் #1

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளதால், விளக்கெண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலசினால், ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து, பொடுகு வருவது குறையும். ஆனால் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்த பின் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

கிராமத்து வைத்தியம் #2

கிராமத்து வைத்தியம் #2

தயிர், எலுமிச்சை மற்றும் தேன் மாஸ்க்

தயிரில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இயற்கையாக உள்ளது மற்றும் எலுமிச்சை அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும். தேன் நல்ல மாய்ஸ்சுரைசராக மற்றும் பட்டுப்போன்ற பொலிவைத் தரும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச பொடுகு தொல்லை விலகும்.

கிராமத்து வைத்தியம் #3

கிராமத்து வைத்தியம் #3

வேப்பிலை

வேப்பிலையிலும் பூச்சை எதிர்ப்பு மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யும் பண்புகள் உள்ளது. இத்தகைய வேப்பிலையை ஒரு கையளவு எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரால் ஷாம்பு போட்டு தலையை அலசிய பின் இறுதியில் வேப்பிலை நீரால் அலச, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிராமத்து வைத்தியம் #4

கிராமத்து வைத்தியம் #4

எலுமிச்சை ஜூஸ்

இன்னும் சுலபமான வழி வேண்டுமானால் மற்றும் உங்களுக்கு தலையில் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தால், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பொடுகு வருவது குறையும்.

கிராமத்து வைத்தியம் #5

கிராமத்து வைத்தியம் #5

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பொடுகு வேகமாக மறையும்.

கிராமத்து வைத்தியம் #6

கிராமத்து வைத்தியம் #6

கற்றாழை

கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் நீரில் ஷாம்பு பயன்படுத்தாமல் வெறுமனே அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, தலைமுடியும் நன்கு ஆரோக்கியமாகவும் பட்டுப்போன்றும் இருக்கும்.

கிராமத்து வைத்தியம் #7

கிராமத்து வைத்தியம் #7

ஆப்பிள் சீடர் வினிகர்

இதுவரை ஆப்பிள் சீடர் வினிகரை கடையில் பார்த்தும் வாங்காமல் இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு பொடுகு அதிகம் இருந்தால், உடனே அதை வாங்குங்கள். ஏனெனில் இது பொடுகைப் போக்க உதவும்.

அதற்கு 3 பங்கு நீரில், 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலசினால், பொடுகைப் போக்கலாம். முக்கியமாக இச்செயலால் தலையில் நாற்றம் வீசுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ultimate Home Remedies For Dandruff

Here are some ultimate home remedies for dandruff. Read on to know more...
Story first published: Tuesday, July 12, 2016, 17:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter