For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயதிற்கு பிறகு உங்கள் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

வயது அதிகமாகும் போது செல் வளர்ச்சியில் மாற்றம் உண்டாகும். இதனால் கூந்தல் சருமம் பாதிக்க்படுவது இயற்கையானதே. ஆனால் நாம் தகுந்த முறையில் பராமரித்தால், கூந்தல் வளர்ச்சியை நிலைக்கச் செய்யலாம்.

|

40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.

Things should follow after 40 for hair growth

இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு , போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான். எவை யென பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பிளாஸ்டிக் சீப்பை தூக்கி எறியுங்கள் :

பிளாஸ்டிக் சீப்பை தூக்கி எறியுங்கள் :

பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

ட்ரை ஷாம்பூ உபயோகியுங்கள் :

ட்ரை ஷாம்பூ உபயோகியுங்கள் :

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும்.

ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடியக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூன்டல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

ஷவரில் குளிப்பதை குறையுங்கள் :

ஷவரில் குளிப்பதை குறையுங்கள் :

ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும்.

ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

சாப்பிடும் உணவு முக்கியம் :

சாப்பிடும் உணவு முக்கியம் :

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது இந்த வயதில் உங்கள் சருமத்திலும், கூந்தலிலும் பிரதிபலிக்கும். 40 வயதுகளிலும் இளமையான பளபளக்கும் கூந்தல் கிடைக்க வேண்டுமென்றால் கீழே சொன்னவைகளை சாப்பிடுங்கள்.

 40க்கு பின் சாப்பிட வேண்டியவை :

40க்கு பின் சாப்பிட வேண்டியவை :

இந்த் சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. 40 களில் இவற்றிற்கு முக்கியதுவம் கொடுங்கள்.

புரதம்- மீன், நட்ஸ், பீன்ஸ்

ஜிங்க் - இறைச்சி, பீன்ஸ்,

இரும்பு - கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். மீன்,

பயோடின்- முட்டை, ராஸ் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி,

செலினியம் - முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things should follow after 40 for hair growth

Things you should take care for your younger hair after 40s
Desktop Bottom Promotion