வில் போல புருவம் வேணுமா? இதை ட்ரை பண்ணுங்களேன்.!ஈஸி டிப்ஸ்

Written By: Hemalatha
Subscribe to Boldsky

அடர்த்தியா வானவில் மாதிரி வளைஞ்சு, புருவம் இருந்த சின்ன கண்களை கூட அழகாய் காட்டும். சிலருக்கு பெரிய கண்கள் இருந்தாலும், புருவம் இல்லைனா, ஏதோ மிஸ்ஸிங் போலத் தோணும்.

இன்னும் கொஞ்சம் அடர்த்தியா புருவம் இருந்தா நல்லாயிருந்திருக்குமே என கண்ணாடி பாத்து நீங்க நிறைய பேர் புலம்பியிருப்பீங்க. இப்படி ஏதோ ஒரு வகையில் புருவம் ங்கிறது நம்ம முக அழகிற்கு ஒரு ப்ளஸ்.

Simple serum for eyebrow growth

புருவமே இல்லைனாலும், அதை வர வைக்கிறதுலதான் நம்ம ஆட்டிடியூட் இருக்குன்னு நினைச்சுகிட்டே இந்த டிப்ஸ் ல சொல்லியிருக்கிறதை ஃபாலோ பண்ணுங்க.

புருவம் வளரச் செய்யும் சீரம் :

இதுக்கு தேவையான பொருள்கள் ரொம்ப எளிமையானதுதான். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் விட்டமின் ஈ ஆகியவைகள் இருந்தால் போதும்.

இந்த எண்ணெயை புருவத்தில் தீட்ட, ஒரு மஸ்காரா பிரஷ் இருந்தால் இன்னும் நல்லதாக இருக்கும். இல்லையென்றாலும் வேறு ஏதாவது ஒரு பிரஷ்ஷினை உபயோகப்படுத்தலாம்.

Simple serum for eyebrow growth

பொதுவாக தலையில் முடி வளர்ச்சிக்கும், புருவத்தில் முடி வளர்ச்சிக்கும் வித்யாசம் உள்ளது. தலையில் ஏற்படும் பொடுகு கூட, புருவங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் அருமையான வளர்ச்சியை புருவத்திற்கு அளிக்கும். விட்டமின் ஈ போஷாக்கினை கொடுத்து, புருவ வளர்ச்சியை தூண்டச் செய்கிறது.

இப்படி மூன்றுமே ஒரு கலவையாக உங்கள் புருவத்தில் செயல் புரிந்து, எப்படி புருவ வளர்ச்சியை தராமல் போகும். எப்படி செய்வது இந்த எண்ணெய் சீரத்தை என பார்க்கலாம்.

தேவையானவை :

தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

விட்டமின் ஈ - அரை டீ ஸ்பூன்

விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

மஸ்காரா பிரஷ் -1

Simple serum for eyebrow growth

மேலே சொன்ன எண்ணெய்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலின் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மஸ்காரா பிரஷில் அந்த எண்ணெயை குழைத்து, பிரஷ்ஷினால், புருவத்தில் பூசுங்கள்.

Simple serum for eyebrow growth

தினமும் இரவில் பூசி வாருங்கள். இந்த எண்ணெயை இமைகளுக்கும் பூசலாம். நீங்கள்பிரஷினால் தீட்டும் அதே வாகில் முடி வளர்ந்து , புருவம் அடர்த்தியாய் காண்பிக்கும். ஒரு மாதத்தில் அழகான புருவம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருப்பது உறுதி.

English summary

Simple serum for eyebrow growth

Simple serum for eyebrow growth
Please Wait while comments are loading...
Subscribe Newsletter