பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி பிளவை தடுக்கும் அற்புதமான எண்ணெய்

By: Batri Krishnan
Subscribe to Boldsky

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் மனிதரை அஷ்டாவதனி என அழைக்கின்றோம். அதே போன்று பல பயன்களைத் தரக்கூடிய ஒரு பொருளை என்னவென்று அழைப்பது. பல்வேறு பலன்களைத் தரக்கூடிய பொருட்கள் மருத்துவத்துறையிலும், அழகு சாதனத் துறையிலும் பயன்படுகின்றன.

oil for dandruff hair fall split ends

அத்தகைய சிறப்பு அதாவது பல பலன்களைத் தரக்கூடிய ஒரு சிறந்த அழகுசாதனப் பொருளைப் பற்றித்தான் நாம் இப்பொழுது காணப்போகின்றோம்.

இந்த எண்ணெய் பொடுகு, பிளவு பட்ட முடி அல்லது முடி உதிர்வை தடுக்கின்றது. உங்களின் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட் இதை பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவைப்படும் பொருட்கள்:

தேவைப்படும் பொருட்கள்:

ஆமணக்கு எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

எலுமிச்சை சாறு (பொடுகு பிரச்சனைகளுக்கு)

 செயல்முறை:

செயல்முறை:

ஒரு கிண்ணத்தில் சம அளவு ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் இனிப்பான பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்தக் கலவையை ஒரு முனை உள்ள குடுவைக்குள் ஊற்றி பத்திரமாக பாதுகாத்து வைத்திடுங்கள். ஒவ்வொரு முறை இந்த எண்ணெயை உபயோகிக்கும் பொழுது நன்கு குலுக்கி, கலக்கிய பின் பயன்படுத்தவும்.

 செயல்முறை:

செயல்முறை:

நீங்கள் நேரடியாக உங்கள் உச்சந்தலையின் மீது எண்ணெய் குடுவையின் நுனியைத் தடவி எண்ணெயை பயன்படுத்தலாம் அல்லது உங்களின் உள்ளங்கையில் எண்ணெயை சேர்த்து அதன் பின்னர் உங்களுடைய உச்சந்தலையில் தடவலாம்.

இந்த இரு முறையிலும் உங்களுடைய உச்சந்தலையை மசாஜ் செய்ய மறவாதீர்கள். அவ்வாறு மசாஜ் செய்வது உங்களுடைய உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்வதை ஊக்கப்படுத்துகின்றது.

 செயல்முறை:

செயல்முறை:

உங்களுடைய பொடுகு பிரச்சனையை தீர்க்க இந்த எண்ணெய் கலவையை புதிதாக பிழிந்த எழுமிச்சை சாற்ற்றுடன் கலந்து உச்சந் தலையில் தேய்க்கவும். எலுமிச்சை சாறு உங்களின் உச்சந்தலையை சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் பொடுகு உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளை தடுக்கின்றது.

 செயல்முறை:

செயல்முறை:

இந்த எண்ணெய் உங்களின் முடி பிளவை சரிபடுத்தவும் பயன்படுகின்றது. ஏனெனில் இது முடி கணைகளை மூடி, முடி உடைவதை தடுக்கின்றது. முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வைப் பெற வாரம் ஒருமுறையாவது இந்த எண்ணெயை பயன்படுத்தவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

oil for dandruff hair fall split ends

one oil can solve your all hair problems. Here the method of preparation.
Story first published: Tuesday, December 13, 2016, 10:10 [IST]
Subscribe Newsletter