உங்கள் கூந்தலுக்கு இரட்டிப்பு ஆயுள் தர இதெயல்லாம் யூஸ் பண்ணி பாருங்க!! பலன்கள் அபாரம்!!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

பொதுவாக எல்லா ஷாம்புகளிலுமே தற்போது சல்பேட் பயன்படுத்தப் படுகிறது.

உங்கள் தலைக்கு நுரையைத் தருவதோடு நின்று விடாமல், இது உங்கள் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணைகளையும் பிரித்து எடுத்துவிடுவதால் புரோட்டீன்களை உடைத்து மயிர்கால்கள் உற்பத்தியை நாளடைவில் தடுத்துவிடுகிறது.

Natural hair cleanser to promote hair growth

உங்கள் தலை முடிக்கு இரட்டை ஆயுளும் பாதிப்புகள் இல்லாத சுத்தமும் தரும் பத்து ஆயுர்வேத இயற்கைப் பொருட்களை விளக்கவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேங்காய்ப்பால் ஷாம்பு :

தேங்காய்ப்பால் ஷாம்பு :

தேவையானவை :

ஒரு கப் தேங்காய்ப் பால் - 1 கப்

காஸ்டில் சோப் (விலங்குக் கொழுப்பற்ற திரவ சோப்பு) - முக்கால் கப்

பாதாம் எண்ணெய் - 5 துளிகள்

ஆலிவ் எண்ணெய்- ஐந்து துளிகள்

 தேங்காய்ப்பால் ஷாம்பு :

தேங்காய்ப்பால் ஷாம்பு :

செய்முறை :

இவையனைத்தும் நன்கு கலக்கி அதை காற்று புகாத ஒரு பாத்திரம் அல்லது பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள் இதில் கால்பாகம் எடுத்து ஒவ்வொரு முறையும் குளிக்கப் பயன்படுத்துங்கள்.

பூந்திக்கொட்டை ஷாம்பு :

பூந்திக்கொட்டை ஷாம்பு :

பூந்திக் கொட்டை முடியை சுத்தம் செய்து, ஈரப்பதமளித்து ஊட்டமளிப்பதுடன் முடியின் வலிமையையும் இழுவையையும் அதிகரிக்கிறது.

இரண்டு மேஜைக் கரண்டி பூந்திக் கொட்டை பவுடரை எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வழியும் பதத்திற்கு செய்துகொள்ளவும்.

அதை உங்கள் தலைமுடியில் தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து தலையை மென்மையாக தடவி மசாஜ் செய்து தண்ணீரால் அலசவும்.

முட்டை கண்டிஷனர்

முட்டை கண்டிஷனர்

ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு முட்டை வெள்ளைக் கருவை போட்டு ஐந்து துளி புதினா எண்ணெய் மற்றும் ரோஸ்மரி ஆயிலையும் சேர்த்துக் கொண்டு கெட்டியான பதம் வரும் வரை கலக்கவும்.

உங்கள் தலை முடியை நனைத்து இந்த கலவையை உங்கள் முடி மற்றும் தலைச் சருமத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டுக் கழுவி பின்னர் அலசவும்.

முட்டை பயோட்டின் எனப்படும் உட்பொருள், வைட்டமின் பி12 மற்றும் புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது.

இவை இணைந்து உங்கள் முடிவளர்ச்சியை ஊக்குவித்து அடர்த்தியாக்கி பளபளப்புடன் வைக்கிறது. சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் உங்கள் தலைமுடியை மற்றும் அதில் சேர்ந்துள்ள அழுக்குகளை அகற்றி அமில காரத்தன்மையை சமன் செய்து சுத்தம் செய்கிறது.

ஒரு மேஜைக் கரண்டி ஆப்பில் சிடர் வினிகர் மற்றும் அரை கப் இயற்கை திரவ சோப்பை எடுத்துக் கொண்டு இரண்டையும் நன்றாகக் கலக்கவும். ஒரு பாட்டிலில் இதை அடைத்து உங்கள் வழக்கமான ஷாம்புவைப் போல் பயன்படுத்தவும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் நிறைந்துள்ள ஆலோசின் மற்றும் இயற்கைவினையத் தடுக்கும் பண்புகள் தலை அரிப்பிலிருந்து உடனடி ஆறுதல் அளிக்கவும், முடி உதிர்வைத் தடுக்கவும் வறண்ட முடியை மென்மையாக்கவும் உதவுகின்றன.

அரை கப் புதிதாக எடுத்த கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, உங்கள் முடியை நனைத்து தலையிலும் முடியின் நுனியிலும் ஜெல்லைத் தடவவும்.

பத்து நிமிடங்கள் கழித்து அலசவும். உங்கள் முடி அதிக எண்ணெய்ப் பசை கொண்டதாக இருந்தால் இதைத் தொடர்ந்து செயவும்.

ரோஸ் மெரி மூலிகை டீ

ரோஸ் மெரி மூலிகை டீ

தலை முடியை சுத்தம் செய்ய மிகவும் எளிதான வழிகளில் ஒன்று மூலிகை டீயை பயன்படுத்துவது.

ரோஸ்மரி இலைகளை போட்டு ஒரு கப் டீ தயாரித்து அதனை அறையில் குளிரவிடுங்கள். இதில் ஐந்து துளி புதினா எண்ணெயையும் அரைதேக்கரண்டி சமையல் சோடாவையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை உங்கள் தலைச் சருமத்திலும் (ஸ்கால்ப்) முடியிலும் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரில் அலசி அதன் பின் கண்டிஷனர் உபயோகப்படுத்தவும்.

 அரிசித் தண்ணீர்

அரிசித் தண்ணீர்

அரிசி ஊறவைத்த நீரில் இனொசிடால் எனப்படும் உட்பொருள் காணப்படுகிறது. இது சேதமடைந்த முடியின் செல்களை சரி செய்து புதிய முடிகள் வளர்வதை ஊக்கப்படுத்தும்.

அரிசி ஊறவைத்த நீரில் தேவையான அளவு சிகைக்காய் சேர்த்து நல்ல மென்மையான கூழாக வரும்வரை நன்றாக வரும் வரை கலக்கவும்.

இந்த கலவையை தலையில் நுரைக்கும் வரை தடவி மென்மையாகத் தேய்க்கவும். இவ்வாறு பத்து நிமிடம் செய்த பின்னர் முடியையும் தலையையும் நன்கு அலசி சுத்தம் செய்யுங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

ரணமாக உள்ள தலைக்கு இது சுத்தத்தையும், ஈரப்பதத்தையும் ஆறுதலையும் வழங்கும் ஒரு அற்புதமான இயற்கை ஷாம்பு.

ஒரு எலுமிச்சை மற்றும் வெள்ளரியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி அல்லது ப்ளெண்டரில் ஊற்றும் பதத்திலான கூழாக அறைத்துக் கொள்ளவும்.

இதை தலை முடிக்கும் தலைச் சருமத்திலும் நன்றாகத் தேய்க்கவும். பின்னர் நன்றாக முடியை அலசி கண்டிஷனர் போடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural hair cleanser to promote hair growth

Natural hair cleanser to promote hair growth and prevent hair fall. try these
Story first published: Tuesday, November 15, 2016, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter