Latest Updates
-
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
தினமும் 100 முடி உதிர்ந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கூந்தல் அழகாய் இருப்பது ஒரு வரம். சுமாராக இருக்கும் முகம், கையென எல்லாவற்றையும் அழகு படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கூந்தலை அவ்வாறு செய்ய முடியாது. பராமரித்தால் மட்டுமே கூந்தல் அழகு பெறும்.
கூந்தல் இயற்கையாக உதிர்வதும் வளர்வதும் நடக்கக் கூடியது. ஆனால் கற்றையாக உதிர்ந்து கொண்டிருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே விட்டால் சொட்டையாகவும் வாய்ப்புகள் உண்டு.

அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

எண்ணெய் மசாஜ் :
எண்ணெய் மசாஜ் உங்கள் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. வேர்க்கால்களை பலப்படுத்தும். எவ்வாறு உங்கள் கூந்தலுக்கும் வேர்க்கால்களுக்கும் போஷாக்கு அளிக்கலாம் என பார்க்கலாம்.

ஸ்டெப் - 1
அரை கப் ஆலிவ் எண்ணெயை லேசாக சூடு படுத்தி ஒரு பஞ்சினால் ஆலிவ் எண்ணையை முக்கி ஸ்கால்ப்பில் தடவுங்கள். இளஞ்சூடு தலையில் படுவது போலிருக்க வேண்டும். பிறகு மசாஜ் அழுத்தமாக மசாஜ் செய்யுங்கள்.

ஸ்டெப் - 2
ஒரு மணி நேரம் கழித்து ஷாம்புவினால் தலைமுடியை அலசவும். ஆலிவ் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ மற்றும் மற்ற தேவையான மினரல்கள் இருப்பதால் அவை கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்துகிறது.

வெங்காயச் சாறு :
வெங்காயத்தை பொடியாக வெட்டி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றில் பஞ்சினால் நனைத்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

வெங்காயச் சாறு :
ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வெங்காயத்திலுள்ள சல்ஃபர் கெரட்டின் உற்பத்தியை பெருக்குகிறது.
சஃபர் வெங்காயத்தில் உள்ள அளவிற்கு மற்ற பொருட்களில் இல்லை. வாரம் ஒருமுறை இந்த குறிப்பை பயன்படுத்தும்போது முடி நன்றாக செழித்து வளரும்.

முட்டை :
முட்டையை உடைத்து அதில் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் தேங்காய் என்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவ்ற்றை கலந்து நன்றாக க்ரீம் போல் அடித்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்யலாம். அடர்த்தியாக முடி வளர ஆரம்பிக்கும்.



Click it and Unblock the Notifications
