மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு சூப்பர் காம்பினேஷனை உபயோகப்படுத்துவது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது.

How to get rid of dandruff using onion juice

குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.

இதற்கு வெங்காயச் சாறு எப்படி உபயோகப்படுத்தினால் பொடுகு போக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. உபயோகித்து அதன் பயனை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு :

புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு :

புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.

பாசிப்பயிறு மற்றும் வெங்காயச் சாறு :

பாசிப்பயிறு மற்றும் வெங்காயச் சாறு :

பாசிப் பயிறை பொடி செய்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

பீட்ரூட் சாறு மற்றும் வெங்காயச் சாறு :

பீட்ரூட் சாறு மற்றும் வெங்காயச் சாறு :

பீட்ரூட் பொடுகை கட்டுப்படுத்தும். அதன் சாறு எடுத்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கல் கழித்து தலையை அலசவும்.

ஆப்பிள் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு :

ஆப்பிள் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு :

ஆப்பிள் மற்றும் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கூந்தல் அடர்தியாகவும் பொடுகின்றியும் ஆரோக்கியமக திகழும்.

 கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு :

கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு :

கற்றாழை சதைப் பகுதியுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள்.அரை மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை தரும்.

 வெந்தயம் மற்றும் வெங்காய சாறு :

வெந்தயம் மற்றும் வெங்காய சாறு :

2 ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து அதனுடன் வெங்காய சாறி அரை கப் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get rid of dandruff using onion juice

Try these Onion super combination recipes to get rid of dandruff
Story first published: Wednesday, November 23, 2016, 9:00 [IST]