பொடுகை விரட்டும் வேப்பிலை நீர் எப்படி தயாரிப்பது?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். சீவும்போது கொட்டும். பொடுகினால் முகப்பருக்கள் அதிகமாகும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும்.

பொடுகைப் பற்றி நீங்கள் பெரியதாய் அப்போதைக்கு கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அது பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய் பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி அளிக்கும்.

எனவே பொடுகிற்கு இப்போதே முடிவு கட்டுங்கள். பொடுகு தொல்லை எப்படி போக்குவது என யோசித்தால் உங்கள் யோசனைக்கு இங்கே பதில் வேப்பிலை. ஆமாம் வேப்பிலையால் பொடுகை ஓட விரட்டமுடியும். எப்படி என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை நீர் :

வேப்பிலை நீர் :

தேவையானவை :

வேப்பிலை - 2 கைப்பிடி

நீர் - 1 லிட்டர்

தேன் - 1 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் 2 கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.

செய்முறை :

செய்முறை :

மறு நாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கக்ள்.

30 நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடு தூர ஓடிடும்.

வேப்பிலை மாஸ்க் :

வேப்பிலை மாஸ்க் :

தேவையானவை :

வேப்பிலை - 2 கைப்பிடி

வெந்தயம் -2 ஸ்பூன்

யோகார்ட் - அரை கப்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

செய்முறை :

செய்முறை :

வெந்தயத்தை முன்னமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்ராக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to get rid of dandruff

Home remedies to get rid of dandruff and hair fall by using neem.
Story first published: Friday, September 23, 2016, 9:30 [IST]
Subscribe Newsletter