For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் எண்ணெய் காம்பினேஷனில் உங்கள் கூந்தலுக்கான 5 டிப்ஸ் !!

|

ஆள் பாதி ஆடை பாதி என்பது போல், அழகு பாதி, கூந்தல் , கூந்தல் பாதி எனக் கூறலாம். கூந்தல் அழகே முக்கால் அழகை தரும். இடுப்பு வரை மேகம் போன்று கூந்தல் இருந்தால் யாரும் ஒரு நொடி திரும்பி வியந்துவிட்டுதான் போவார்கள். அப்படி அழகை தரும் கூந்தல் கிடைக்க வேண்டுமா? இந்த குறிப்புகள் உத்திரவாதம் தருகின்றன.

கூந்தலில் இருக்கும் பாதிப்புகளை நிவர்த்தி செய்து, அடர்த்தியான கூந்தல் பெறவும், முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் பழைய காலங்களில் இயற்கையாக பின்பற்றி வந்தார்கள். நாம்தான் காலப்போக்கில் வாழ்க்கையை எளிமையாக்க ஷாம்பு, கலரிங் உபயோகித்து, இப்போது கூந்தலை எளிமையாக்கி விட்டுவிட்டோம். அப்படி கூந்தலிற்கு போஷாக்கை தரும் அந்த மூலிகைகள் எவை? வாங்க பாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம் + யோகார்ட் :

வெந்தயம் + யோகார்ட் :

வெந்தயத்தை முந்தைய தினமே ஊற வைத்து மறு நாள் காலையில் பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் யோகார்ட், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

ஓட்ஸ் + பால் :

ஓட்ஸ் + பால் :

ஓட்ஸை பொடி செய்து அதனுடன் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.

கற்றாழை + தேங்காய் எண்ணெய் :

கற்றாழை + தேங்காய் எண்ணெய் :

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முடிக்கேற்ப தேங்காய் எண்ணெயை கலந்து ஸ்கால்பில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை கழுவவும். கூந்தல் அடர்த்தியாய் வளரச் செய்யும்.

சீகைக்காய் எண்ணெய் :

சீகைக்காய் எண்ணெய் :

1 டேபிள் ஸ்பூன் சீகைக்காயில் ஒரு கப் இளஞ்சூடான தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே வைத்திருக்கவும். தினமும் அதனை குலுக்குங்கள்.

2 வாரம் கழித்து இந்த எண்ணெயை உபயோகிக்கலாம். சீகைக்காய் எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசினால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

 முட்டை :

முட்டை :

முட்டையின் வெள்ளைக் கருவில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தலையில் லேசாக ஈரம் செய்து இந்த கலவையை தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbal Hair masks for Damaged hair

Follow these Ancient Herbal Hair mask for repairing damaged hair
Story first published: Thursday, September 1, 2016, 17:48 [IST]
Desktop Bottom Promotion