Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா?
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் சூப்பர் மாஸ்க் ரெசிப்பிகள் !!
கூந்தல் அழகு பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும். முடி உதிர்தல் அதிகமாக இருந்தால் உடனடியாக தீர்வு காணவில்லையென்றால் அது உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். உங்களுக்கான தீர்வுகள் இங்கே.
முடி உதிர்தல் பருவ காலத்திற்கு ஏற்ப குறையும் அதிகரிக்கும். குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட்சியை உண்டாக்கும்.
முடி உதிர்தல் சாதரண பிரச்சனையென்ராலும் எளிதில் தீர்க்கப்படாதது. கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கவும்.

முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் இங்கே அருமையான சில ரெசிப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சித்துப் பாருங்கள்.

வாழைப்பழ ஹேர் மாஸ்க் :
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இயற்கை எண்ணெய், விட்டமின் உங்கள் ஸ்கால்ப்பிற்கு போஷாக்கு அளித்து ஈரப்பதத்தை அளிக்கும்.
தேவையானவை :
பழுத்த வாழைப் பழம் - 2
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
வாழைப்பழத்தை நன்றாக மசித்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதனுடன் சிறிது பாதாம் எண்ணெயும் சேர்த்து தலையில் தடவுங்கள்.
அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். மைல்டான ஷாம்பு போடவும்.

விளக்கெண்ணெய் மற்றும் பிராந்தி மாஸ்க் :
தேவையானவை :
விளக்கெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
பிராந்தி - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1

விளக்கெண்ணெய் மற்றும் பிராந்தி மாஸ்க் :
செய்முறை :
முட்டையை அடித்து அதனுடன் விளக்கெண்ணெய் பிராந்தியை கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

முட்டை மற்றும் பால் மாஸ்க் :
முட்டை - 1
பால் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முட்டையுடன் மற்ற பொருட்களை கலந்து தலையில் தடவுங்கள். இதமாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.



Click it and Unblock the Notifications
