Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர்.
ஆண், பெண் இருபாலரும் சந்திக்கும் மிகப்பெரிய அழகியல் பிரச்சனை தான் நரை முடி. இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.
நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

எனவே நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர்.
இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

செயல் #1
முதலில் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செயல் #2
பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

செயல் #3
பின்பு அந்த கலவையை குளிர வைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செயல் #4
தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

செயல் #5
பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாகஅந்நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக்கூடாது.

செயல் #6
பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும்.

குறிப்பு
உருளைக்கிழங்கு நீரை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக்கூடாது. மேலும் இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், 2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இயற்கை வழிகளை நாடும் போது, பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.



Click it and Unblock the Notifications
