முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?

Posted By:
Subscribe to Boldsky

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து இருப்பதால், முடி உதிர்வது மற்றும் இதர பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றிற்கு தீர்வே இல்லையா என்று பலரும் கேட்கலாம்.

ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு அனைவரும் அறிந்த நெல்லிக்காயைக் கொண்டே அற்புதமான தீர்வைக் காணலாம். ஆம், நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும்.

அதற்கு நெல்லிக்காயைக் கொண்டு ஒருசில ஹேர் மாஸ்க்குகளைப் போட வேண்டும். சரி, இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் முட்டை

நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் முட்டை

3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

நெல்லிக்காய் பொடி செய்வது எப்படி?

நெல்லிக்காய் பொடி செய்வது எப்படி?

நெல்லிக்காயை துண்டுகளாக்கி, அதனை சூரிய வெளிச்சத்தில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து வாரம் ஒரு முறை ஹேர் பேக் போட்டால், முடி நன்கு வளரும்.

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்து, பின் 2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

நெல்லிக்காய் மற்றும் வெந்தயப் பொடி

நெல்லிக்காய் மற்றும் வெந்தயப் பொடி

1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் முடியை மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர வைத்து, பின் 1/2 கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில், எண்ணெய் ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனை குளிர வைத்து, காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றினால், நெல்லிக்காய் எண்ணெய் ரெடி!!!

நெல்லிக்காய் எண்ணெய் மசாஜ்

நெல்லிக்காய் எண்ணெய் மசாஜ்

வாரம் ஒருமுறை நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இதனை இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் தூள்

நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் தூள்

ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பூந்திக்கொட்டை பொடி, 1 டீஸ்பூன் சீகைக்காய் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amla Juice Recipes For Hair Growth

The best of amla (gooseberry) juice recipes for hair growth are mentioned here. Here is how to use & make amla juice for hair growth.
Story first published: Saturday, June 27, 2015, 15:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter