For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகினால் வரும் முகப்பருக்களைப் போக்க 7 வழிகள்!!!

By Karthikeyan Manickam
|

உங்கள் தலையில் நிறையப் பொடுகுகள் உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு முகப்பருக்கள் வரும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிலும் உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் இருந்தால், இந்தப் பொடுகுகள் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தலையின் உலர்ந்த தோல் பகுதிகளில் செதில் செதிலாக உதிர்வது தான் பொடுகு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பொடுகுகள் உங்கள் முகத்தைத் தாக்குவதால் பருக்கள் வெடிக்கின்றன. சிலருக்கு உடலிலும் சிறு சிறு பருக்கள் தோன்றும்.

பருக்கள் வர பல காரணங்கள் கூறப்பட்டாலும், பொடுகும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தப் பொடுகால் வரும் பருக்களிலிருந்து தப்பிக்க 7 வழிகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகு எதிர்ப்பு ஷாம்பு

பொடுகு எதிர்ப்பு ஷாம்பு

வாரத்திற்கு இரு முறை நல்ல பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை முடிகளில் பயன்படுத்தவும். ஸ்கால்ப், காதுகள், முகம் என்று பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் இந்த ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். பொடுகுகள் மற்ற இடங்களில் படாதவாறு தலைமுடியைக் கழுவ வேண்டும்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

ஷாம்பு போட்டுக் கழுவிய பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்தும் போது, அது உச்சந்தலையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண்டிஷனரிலிருந்து வரும் நுரைகளையும் தலைமுடியிலேயே தங்கிவிடாதவாறு சுத்தமாகக் கழுவ வேண்டும்.

முகத்தில் முடி படக் கூடாது

முகத்தில் முடி படக் கூடாது

தலைமுடியில் உள்ள பொடுகுகள் முகத்தில் பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பருக்கள் கண்டிப்பாக வந்துவிடும்.

சூடான எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெய் மசாஜ்

வாரத்திற்கு ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது. மேலும் இது உலர்ந்த செதில்களை நீக்கவும், பளபளப்பாக வைத்திருக்கவும் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

உச்சந்தலையில் சிறிது எலுமிச்சை ஜூஸைத் தடவி, 30 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் நன்றாக தலைமுடியைக் கழுவ வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

முடி ஸ்டைல் வேண்டாம்

முடி ஸ்டைல் வேண்டாம்

தலைமுடிகளை ஸ்டைலாக வைத்திருக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி முடியை உலர விட்டால் பொடுகுகள் பல்கிப் பெருகக் கூடும். பின்னர் அவை முகத்தைத் தாக்கி, பருக்களை ஏற்படுத்தும்.

அடிக்கடி தலை சீவவும்

அடிக்கடி தலை சீவவும்

ஒரு நாளைக்கு 2 முறையாவது தலைமுடியை சீவ வேண்டும். அடிக்கடி தலைமுடியை சீவுவதால், அதிலிருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படும். மேலும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Get Rid Of Acne Due To Dandruff

If you're already acne-prone, dandruff can make the problem even worse. Among a lot of reasons for acne, dandruff is one of the most common. Here are a few ways to get rid of acne cased due to dandruff.
Desktop Bottom Promotion