குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையைத் தடுக்கும் ஹேர் மாஸ்க்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடைவதைப் போல் ஸ்காப்பும் அதிகம் வறட்சி அடையும். இதற்கு காரணம், குளிர்காலத்தில் வீசும் வறட்சியான காற்று தான். இப்படி ஸ்கால்ப் வறட்சியானால், பொடுகுத் தொல்லை ஆரம்பமாகிவிடும். ஆகவே குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையைத் தடுக்க சருமத்தைப் பராமரிப்பது போன்றே கூந்தலையும் சரியாக பராமரிக்க வேண்டும்.

அதிலும் கூந்தலுக்கு வாரம் ஒருமுறையாவது மாஸ்க் போட்டு வந்தால், பொடுகு பிரச்சனை நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, இப்போது பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் சில ஹேர் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை மற்றும் முட்டை

எலுமிச்சை மற்றும் முட்டை

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு பௌல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் பாதி எலுமிச்சையை பிழிந்து நன்கு கலந்து, தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலசினால், தலையில் உள்ள பொடுகானது விரைவில் போய்விடும்.

தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு

தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் பால்

ஓட்ஸ் மற்றும் பால்

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் தேவையான அளவு பால் சேர்த்து ஓரளவு நீர்மமாக செய்து, தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

வாழைப்பழம், எலுமிச்சை மற்றும் எண்ணெய்

வாழைப்பழம், எலுமிச்சை மற்றும் எண்ணெய்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிசச் சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைக்கு மாஸ்க் போட்டால், பொடுகு நீங்குவதுடன், கூந்தல் வறட்சி நீங்கி முடியானது பளபளப்புடன் இருக்கும்.

எலுமிச்சை மற்றும் தயிர்

எலுமிச்சை மற்றும் தயிர்

தயிரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hair Masks for Dandruff During Winter

The masks mentioned here are the very basic DIY hair masks for dandruff. Read more to know...
Story first published: Saturday, November 15, 2014, 15:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter