Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இயற்கையான முறையில் பொடுகை விரட்ட வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!
இன்றைய நாட்களில் தலைக்கு மேலுள்ள பிரச்சனைகளில, நம்மால் சமாளிக்க முடியாத மற்றுமொரு பிரச்சனையாக பொடுகுத் தொல்லை உள்ளது. பலரும் பல விதமான இரசாயனங்கள் மற்றும் ஷாம்புக்களைப் பயன்படுத்தி பொடுகை விரட்டும் முயற்சியில் தோல்வியைத் தழுவியிருப்பீர்கள்.
நீங்கள் செய்த முயற்சிகள் எல்லாம் தற்காலிக பலன்களைக் கொடுத்திருந்தாலும், மீண்டும் அதே தொல்லை தொடரவும் செய்திருக்கும். இந்த கட்டுரையில் இயற்கையான முறையில் பொடுகுகளை நீக்கும் சில வழிமுறைகளைப் பற்றி நாங்கள் கொடுத்துள்ளோம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரின் அமிலத்தன்மை உங்களுடைய மண்டைத் தோலின் (Scalp) pH அளவை மாற்றி, அதனை உறுதியானதாக்கி விடுவதால், பொடுகை உருவாக்கும் ஈஸ்ட் அந்த இடத்தில் தங்கி வளர முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக பொடுகுகளை அறவே ஒழிக்க முடியும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, குளித்து முடித்த பின் இறுதியில் தலையை அலச வேண்டும்.

சமையல் சோடா
உங்களுடைய தலையை நன்றாக ஈரமாக்கி விட்டு, மண்டைத் தோலில் சமையல் சோடாவைப் போட்டு நன்றாக அழுத்தித் தேய்க்கவும். இங்கே ஷாம்புவைப் பயன்படுத்த வேண்டாம். பொடுகுகளை உருவாக்கும் பூஞ்சைகளை சமையல் சோடா சுத்தம் செய்து விடும்.

தேங்காய் எண்ணெய்
3 முதல் 5 தேக்கரண்டிகள் தேங்காய் எண்ணெயை உங்களுடைய மண்டைத் தோலில் நன்றாகத் தடவி விட்டு, இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். காலையில் எழுந்து மென்மையான ஷாம்பு போட்டு, அந்த எண்ணெயை நீக்கினால், பொடுகும் அத்துடன் பறந்துவிடும்.

எலுமிச்சை
உங்களுடைய ஸ்கால்ப்பில் 2 தேக்கரண்டிகள் எலுமிச்சைச் சாற்றை விட்டு, நன்றாகத் தண்ணீர் விட்டு அலசவும். பின் 1 கோப்பை தண்ணீருடன் எலுமிச்சைச் சாற்றை விட்டு நன்றாகக் கலக்கி, ஷாம்பு போட்ட பின்னர் எலுமிச்சை தண்ணீரைக் கொண்டு கடைசியாக தலைமுடியை நன்றாக அலச வேண்டும். இதனால் எலுமிச்சையின் அமிலத்தன்மை உங்களுடைய மண்டைத் தோலின் pH அளவை சமப்படுத்துவதால், பொடுகுகளை விரட்ட முடிகிறது.

பூண்டு
பூண்டில் இருக்கும் பூஞ்சைக்கு எதிரான குணங்கள் பொடுகுகளை உருவாக்கும் பாக்டீரியாக்களை ஒழித்து விடச் செய்யும். அதற்கு பூண்டை நன்றாக அரைத்து, தேனுடன் கலந்து உங்களுடைய தலையில் போட்டு நன்றாக மசாஜ் செய்த பின்னர், தலைமுடியை நன்றாக நீரில் அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications