Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அக்காலத்தில் எல்லாம் கூந்தலைப் பராமரிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை அதிகரித்து, அவற்றை போக்க கடைகளில் விற்கப்படும் மருந்துகள் கலக்கப்பட்ட எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தி, பின் அந்த எண்ணெயால் மேலும் பல பிரச்சனைகளை சந்தித்திருப்போம். சிலருக்கு வழுக்கை கூட ஏற்பட்டுள்ளது.
எனவே இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஒரு வாரத்திற்கு இரண்மு நாட்களாவது தவறாமல் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைப் போக்கலாம்.
இப்போது தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வாருங்கள்.

கூந்தல் சிக்கடைவதை தடுக்கும்
கூந்தலானது அடிக்கடி சிக்கடைந்து கொண்டிருந்தால், அவற்றை எளிதில் சரிசெய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். மேலும் கூந்தல் வறட்சியுடன் அசிங்கமாக காணப்படும் போது, அவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

மயிர்கால்களை வலுவாக்கும்
தேங்காய் எண்ணெயால் கூந்தலை பராமரித்தால், மயிர்கால்களானது வலுவடைவதுடன், கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கும்.

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்
தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க, தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

பொடுகுத் தொல்லையை தடுக்கும்
ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகுத் தொல்லை. இத்தகைய பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் நன்கு மசாஜ் செய்து குளித்து வாருவதுடன், தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வாருங்கள். இப்படி தவறாமல் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொலிவான கூந்தல்
கூந்தலின் பொலிவை இயற்கையாக அதிகரிக்க வேண்டுமானால், கண்ட கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், தினமும் கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள்.



Click it and Unblock the Notifications
