Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
மாசில்லாத கூந்தல் வேண்டுமா? எலுமிச்சை யூஸ் பண்ணுங்க...
எலுமிச்சையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி அறியாதவர் எவரும் இலர். ஏனெனில் அந்த அளவில் எலுமிச்சை பலவாறு பயன்படுகிறது. அதிலும் எலுமிச்சை பழமானது உடலுக்கு, சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அதனை சரியான அளவில் மற்றும் சரியான வழியில் பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறுவது உறுதி.
இதுவரை எத்தனையோ ஹேர் மாஸ்க்குகளைப் பற்றி படித்திருப்போம். அதேப் போல் பல மாஸ்க்குகளில் எலுமிச்சையைப் பயன்படுத்தியும் மாஸ்க்குகள் செய்வோம். ஏனெனில் எலுமிச்சையை கூந்தலுக்குப் பயன்படுத்தினால், கூந்தலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். இதனால் கூந்தல் மற்றும் ஸ்கால்ப் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது எலுமிச்சையை எப்படியெல்லாம் கூந்தலுக்குப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்...

எலுமிச்சை மற்றும் உப்பு
ஒரு எலுமிச்சை துண்டை, உப்பில் தொட்டு, ஸ்கால்ப்பில் தடவி, குளித்து வந்தால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளான பொடுகு, அதிகப்படியான எண்ணெய் பசை, அரிப்பு போன்றவறை நீங்கி, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

எலுமிச்சை மற்றும் இளநீர்
எலுமிச்சை சாறு மற்றும் இளநீரை சரிசமமான அளவில் எடுத்துக் கொண்டு, அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்குவதோடு, வறட்சிகள் நீங்கி, மயிர்கால்களும் வலுவுடன் இருக்கும்.

எலுமிச்சை சாறு
சில நேரங்களில் கூந்தல் பராமரிப்பிற்கு பின், கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசும். உதாரணமாக, முட்டை ஹேர் பேக்குகளை கூந்தலுக்குப் போட்ட பின்னர், கூந்தலில் இருந்து முட்டையின் நாற்றமானது வீசும். அத்தகைய துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, எலுமிச்சையின் தோலை 1 லிட்டர் தண்ணீர் போட்டு கொதிக்க விட்டு, பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, குளிர வைத்து, அதனை கூந்தலில் தெளித்தால், கூந்தலில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

எலுமிச்சை மற்றும் வெந்தயம்
வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அதனை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சை சாறு உற்றி மென்மையாக அரைத்து, கூந்தலுக்கு தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று இருப்பதோடு, கூந்தல் உதிர்தலை குறைத்து, அதன் வளர்ச்சியை அதிரிக்கும்.

ஹென்னா மற்றும் எலுமிச்சை
4 டேபிள் ஸ்பூன் ஹென்னா, 1 முட்டை, பாதி எலுமிச்சை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை நன்கு அடித்துக் கொண்டு, அதில் ஹென்னாவை மெதுவாக தூவி கலந்து, எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின்பு நீரில் அலசினால், கூந்தல் நன்கு பட்டுப்போன்று இருக்கும்.

எலுமிச்சை மற்றும் தயிர்
5-6 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 4 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகு, ஏந்தல் உதிர்தல் போன்றவை நீங்கி, கூந்தல் நன்கு வலுவோடு வளரும்.

ப்ளீச்சிங் செய்ய எலுமிச்சை...
4 எலுமிச்சைகளை ஒரு பௌலில் பிழிந்து, அந்த சாற்றினை கூந்தலில் தடவி, வெயிலில் 15 நிமிடம் நின்றால், கூந்தலின் கருமையானது தக்க வைக்கப்படும்.



Click it and Unblock the Notifications
