For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தலைப் பராமரிக்கப் பயன்படும் சில இயற்கை பொருட்கள்!!!

By Maha
|

பெண்களுக்கு அழகே கூந்தல் தான். அதிலும் புடவை அணிந்து, நீளமான கூந்தலை நன்கு பின்னல் போட்டு, பூ வைத்து வந்தால், அவர்களின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் அத்தகைய நீளமான கூந்தல் தற்போதுள்ள பெண்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் ஸ்டைல் என்ற பெயரில், கூந்தலை பலவாறு வெட்டிக் கொள்கிறார்கள்.

மேலும் எங்கு சென்றாலும் ப்ரீ ஹேர் என்று கூந்தலை விரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கூந்தலை முறையாக இயற்கைப் பொருட்கள் கொண்டு பராமரிக்காமல், கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு பராமரித்து, பின் அதன் பக்கவிளைவான கூந்தல் உதிர்தல், பொடுகு, பொலிவிழந்த கூந்தல் என அனுபவித்தப் பின்னர் இயற்கை பொருட்களின் உதவியை நாடுகின்றனர்.

ஆகவே அத்தகையவர்களுக்கு கூந்தலைப் பராமரிப்பதற்கான ஒருசில சிறந்த இயற்கைப் பொருட்களின் பட்டிலைக் கொடுத்து, அதனை எப்படியெல்லாம் உபயோகிக்க வேண்டும் என்று தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான கூந்தல் பராமரிப்பு பொருட்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. அதைப் படித்து கூந்தலை பராமரித்து, ஆரோக்கியமான, நீளமான மற்றும் பொலிவான கூந்தலைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய், கூந்தல் பராமரிப்பு பொருட்களில் முக்கியமான ஒன்று. அதிலும் நெல்லிக்காயானது பொடுகு, கூந்தல் உதிர்தல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணத்தைத் தரும். அதற்கு நெல்லிக்காய் பொடியை தயிரில் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

தயிர்

தயிர்

கூந்தலை பொலிவோடும், அடர்த்தியாகவும் வளரச் செய்வதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு தயிரை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறும் கூந்தல் உதிர்தல் மற்றும் பொடுகை போக்கும் தன்மைக் கொண்டது. அதற்கு எலுமிச்சை சாற்றினைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், பொடுகு மட்டுமின்றி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

மிகவும் பிரபலமான தேங்காய் எண்ணெய் கொண்டும் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

ஹென்னா

ஹென்னா

ஹென்னா பொடியில், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து அலசினால், கூந்தல் நன்கு மென்மையாகவும், கருமையாகவும் வளரும்.

வினிகர்

வினிகர்

வினிகரை கூந்தலுக்குப் பயன்படுத்தினால், கூந்தல் பட்டுப் போன்றும், மென்மையாகவும் இருக்கும். அதற்கு தலைக்கு குளித்த பின்னர், இறுதியில் வினிகரை நீரில் கலந்து அலச வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அது கூந்தல் உதிர்தல் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும். மேலும் பேன் தொல்லை மற்றும் பொடுகு பிரச்சனைகளையும் போக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளான கூந்தல் உதிர்தல், பொடுகு, கூந்தல் வறட்சி மற்றும் கூந்தல் வெடிப்பு போன்றவற்றை போக்க வல்லது. அதற்கு வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையை நன்கு மென்மையாக அடித்து, அதனை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் மென்மையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் பி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து குளித்தால், கூந்தலை ஆரோக்கியமாக பேண முடியும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லியை நன்கு மென்மையாக அரைத்து, அதில் சிறிது தயிர் ஊற்றி, கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் உதிர்தலை குறைக்க முடியும்.

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில் மயிர்கால்களை நன்கு வலுவாக்கி, பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதற்கு வாரம் ஒருமுறை லாவெண்டர் ஆயிலைக் கொண்டு தலையை மசாஜ் செய்யலாம்.

தேன்

தேன்

நல்ல மென்மையான மற்றும் பொலிவான கூந்தல் வேண்டுமெனில், தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது சேர்த்து, கூந்தலுக்கு ஹேர் பேக் போடலாம்.

ஷியா பட்டர்

ஷியா பட்டர்

கூந்தல் வறட்சியை தவிர்க்க வேண்டுமெனில், ஷியா பட்டரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த வெண்ணெய் கூந்தல் உதிர்தலையும் தடுக்கும். அதற்கு ஷியா பட்டர் கொண்டு தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ

செம்பருத்திப் பூவை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த பூவை அரைத்து தயிர் அல்லது முட்டையுன் சேர்த்து தலைக்கு ஹேர் பேக் போட்டால், கூந்தல் உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஜிஜோபா ஆயில்

ஜிஜோபா ஆயில்

பாதிக்கப்பட்ட கூந்தலை சரிசெய்து, அதன் பொலிவை அதிகரித்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதில் ஜிஜோபா ஆயில் முதன்மையானது. அதற்கு இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

கூந்தல் வெடிப்பு, வறட்சி, பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு தேங்காய் பால் சிறந்த பொருள். ஆகவே தேங்காய பால் கொண்டு கூந்தலை நன்கு மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

மயோனைஸ்

மயோனைஸ்

கூந்தல் வறட்சி மற்றும் பாதிக்கப்பட்ட கூந்தலை சரிசெய்வதற்கு, மயோனைஸை கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் மென்மையாகி, ஆரோக்கியமாக வளரும்.

பூந்திக்கொட்டை

பூந்திக்கொட்டை

நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில், பூந்திக்கொட்டையை பொடி செய்து, தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் நரைமுடி கூட போய்விடும்.

மேற்கூறிய அனைத்தையும் பெண்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. ஆண்களும் பின்பற்றினால், வழுக்கை தலையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Hair Care Ingredients From Home

There are so many kitchen ingredients that can be used for proper hair care. These ingredients are applied to treat several hair problems which includes hair fall, dandruff, dry scalp, itchiness to name a few. So, instead of wasting money on artificial hair products, try these ingredients that are easily available at home.
Story first published: Monday, August 19, 2013, 15:45 [IST]
Desktop Bottom Promotion