Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
குளிர்காலத்திற்கு ஏற்ற ஹேர் பேக்குகள்!!!
குளிர்காலத்தில் சருமத்தில் மட்டும் அதிக வறட்சி ஏற்படுவதில்லை, கூந்தலிலும் தான். அதிலும் பருவநிலையானது கோடையில் இருந்து, குளிர்காலத்திற்கு மாறினால், கோடையில் கூந்தல் பராமரிப்பிற்கு என்று அடிக்கடி கூந்தலை நீரில் அலசுவது இருக்கும். ஆனால் பருவநிலை திடீரென்று மாறும் போது, நமது கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் இந்த காலத்தில் கூந்தலானது அதிகம் உதிர்வதோடு, வறட்சியடைந்து, மென்மையிழந்து காணப்படும். இதனால் கூந்தலைப் பராமரிக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல முடியுமா என்ன? அதிலும் அவ்வாறு சென்று, அதிக பணம் செலவழித்து கூந்தலை பராமரிப்பதற்கு, எந்த ஒரு செலவுமின்றி, வீட்டில் இருக்கும் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்து, ஹேர் மாஸ்க்குகள் செய்து, கூந்தலை பராமரிக்கலாம்.
மேலும் கூந்தலில் நிறைய வகைகள் உள்ளன. அத்தகைய வகைகளில் எந்த வகை கூந்தலுக்கு, என்ன மாஸ்க் போட்டால் சரியாக இருக்கும் என்பதை அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இந்த மாஸ்க்குகளை பயன்படுத்தினால், கூந்தலானது நன்கு பட்டுப்போன்று, நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்றும் கூறுகின்றனர்.
என்ன தான் கடைகளில் கெமிக்கல் கலக்காத ஹேர் பேக்குகள் இருந்தாலும், வீட்டில் செய்து போடப்படும் ஹேர் மாஸ்க்குகளால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. சரி, இப்போது எந்த கூந்தலுக்கு, என்ன மாஸ்க் போடுவது என்பதைப் பார்ப்போமா!!!

வாழைப்பழ ஹேர் பேக்
கூந்தல் அதிக வறட்சியுடன் இருந்தால், அப்போது ஒரு வாழைப்பழத்தை எடுத்து, நன்கு மசித்து அதோடு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, பின் கூந்தலிலும், ஸ்கால்ப்பிலும் படும்படியாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி நீங்கி, மென்மையோடு இருக்கும்.

முட்டை ஹேர் பேக்
கூந்தலானது எந்த காரணமுமின்றி அதிகமாக உதிர்ந்தால், அதிகமாக பாதிப்படைந்துள்ளது என்று அர்த்தம். ஆகவே அத்தகைய கூந்தல் பாதிப்பை தடுக்க, 2 முட்டையின் மஞ்சள் கருவுடன், 1 முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து அடித்துக் கொண்டு, அதோடு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் சிறிது தேன் கலந்து, கூந்தலுக்கு தடவி, 45 நிமிடம் ஊற வைத்து, பின்பு நீரில் அலச வேண்டும். அலசியப் பின் ஒரு கப் தயிரை கூந்தலுக்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், கூந்தல் வலுவடைந்து உதிர்வது நின்றுவிடும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நல்லது.

வெந்தய மாஸ்க்
சிலருக்கு கூந்தல் அடங்காமல் பேய் போன்று காணப்படும். அத்தகைய கூந்தலை அடக்குவதற்கு வெந்தய ஹேர் பேக் சிறந்ததாக இருக்கும். அதற்கு இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை நைஸாக அரைத்து, தயிருடன் கலந்து, கூந்தலுக்கு தடவி, காய வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்துவிட்டு பின்னர் பாருங்கள். கூந்தல் நன்கு பட்டுப் போன்று இருப்பதோடு, பேய் போன்று ஆகாமல் அடங்கிவிடும்.

வினிகர் மற்றும் தேன் மாஸ்க்
கூந்தலானது பொலிவிழந்து காணப்பட்டால், அப்போது ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் வினிகர் மற்றும் தேனை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக இருப்பதோடு, பொலிவோடும் காணப்படும். இந்த ஹேர் பேக்கை அடிக்கடி செய்யக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், வினிகர் கூந்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே குறைந்தது 5 வாரத்திற்கு ஒரு முறை செய்வது போதுமானது.

முட்டை மற்றும் விளக்கெண்ணெய் ஹேர் பேக்
கூந்தலின் முனைகளில் வெடிப்புகள் அதிகமாக காணப்பட்டால், ஒரு முட்டையின் மஞ்சள் கருவோடு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து கலந்து, கூந்தலுக்கு தடவி, 45 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை அடிக்கடி செய்து வந்தால், கூந்தலின் முனைகளில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications