Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
முடி வெடிப்பை தடுக்க இயற்கை வழிகள்!

முடியின் நுனி வெடித்திருந்தால் ட்ரிம் செய்து அகற்றுவதே சிறந்த வழி என்றும் கூறுகின்றனர். மேலும் அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
முதலில் சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் உட்கார்ந்தால் முடி வெடித்துள்ளது நன்றாகத் தெரியும். ஆகவே அவ்விடத்தில் உட்கார்ந்து கொஞ்சமாக முடியை எடுத்து, அந்த முடியை முறுக்கினால் வெடித்துள்ள முடி நீட்டிக்கொண்டு இருக்கும். பின் ஒரு சிறிய கத்திரிக் கோலை எடுத்துக் கொண்டு, வெடித்துள்ள பகுதியை வெட்ட வேண்டும்.
இவ்வாறு கூந்தல் முழுவதும் செய்தால் முடியானது, வெடிப்பு இல்லாமல் அழகாக காணப்படும். இவ்வாறு செய்ய குறைந்தது 45 நிமிடமாவது ஆகும். இதை தொடர்ந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்தால் முடி நன்றாக இருக்கும் என்றும் கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
இயற்கை வழிகள்:
1. ஆமணக்கெண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு 30 நிமிடம் மசாஜ் செய்து, சுடு தண்ணீரில் நனைத்த துணியால் சிறிது நேரம் கட்டி, பின் தலைக்கு குளித்தால் வெடிப்பு வராது.
2. முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு ஸ்பூன் பாதம் எண்ணெய்யை விட்டு தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குளித்தால் நல்லது.
3. வெண்ணைப் பழம் அல்லது மயோனைஸால் ஆன மாய்சுரைசர் மாஸ்க்கை தலைக்கு தடவி 15-30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் முடி வெடிப்பு வராது. வேண்டுமென்றால் ஆலிவ் ஆயிலை சூடேற்றி அதனுடன் சேர்த்து தடவி குளிக்கலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடி அழகாக இருக்கும்.
இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள், முடியானது வெடிப்பு இல்லாமல் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்



Click it and Unblock the Notifications
