Latest Updates
-
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க
ஆண்களே! உங்களுக்கு வழுக்கை விழ தொடங்குதா? அப்ப இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...
Hair Care Tips In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் இந்த தலைமுடி தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக அதிகம் சேதமடைகிறது.
தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் ஒருவர் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த எண்ணெய்களை தவறாமல் தினமும் பயன்படுத்தி வர வேண்டும். பழங்காலத்தில் நம் முன்னோர்களின் தலைமுடி வலிமையாக இருந்ததற்கு காரணம், அவர்கள் தலைக்கு தவறாமல் எண்ணெய் வைத்து வந்த பழக்கம் தான் காரணம்.

பொதுவாக பெண்கள் தங்களின் தலைமுடிக்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் ஆண்களுக்கு அந்த அளவு பொறுமை இல்லை. இருப்பினும் ஆண்கள் அதிக தலைமுடி உதிர்வை சந்தித்து, வழுக்கை தலையைப் பெறத் தொடங்கினால், ஒருசில எண்ணெய்களை தினமும் பயன்படுத்தி வந்தாலே போதும். இந்த எண்ணெய்கள் முடி உதிர்வைக் குறைத்து முடியின் வளர்ச்சியைத் தூண்டும். கீழே தலை வழுக்கையாகிக் கொண்டிருக்கும் ஆண்கள் எந்த மாதிரியான எண்ணெய்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெயை விட லேசானது. இந்த எண்ணெயில் வைட்டமின் பி, கே, ஈ போன்றவை அதிகமாக உள்ளன. இவை ஆண்களின் தலைமுடி உதிர்தலுக்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்த எண்ணெயை ஆண்கள் தினமும் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால், 34.5 சதவீதம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும். அதுவும் இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் பி7 தலைமுடியின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
ஜபோரண்டி எண்ணெய்
ஜபோரண்டி என்பது தென் அமெரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் வளரும் ஒரு மூலிகை தாவரமாகும். இந்த மூலிகையில் இருந்து தான் ஜபோரண்டி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, ஸ்கால்ப்பிற்கு ஊட்டமளிக்கிறது, நரைமுடியைத் தடுக்கிறது, முடி வெடிப்பு மற்றும் பொடுகைத் தடுக்கிறது. சிறப்பான பலனைப் பெற இந்த எண்ணெயை எப்போதும் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
பிரிங்கராஜ் எண்ணெய்
பிரிங்கராஜ் எண்ணெய் பித்தத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. இந்த எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை வழங்குகிறது. இதன் விளைவாக தலை முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி வலுவாக இருக்கும்.
நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காய் எண்ணெய் ஒரு சக்தி வாய்ந்த எண்ணெய். இது ஆண்களின் வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியை தூண்டவும், மயிர்கால்களை வலுவாக்கவும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகமாக உள்ளன. இவை தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, மியிர்கால்களை பலப்படுத்தும். நெல்லிக்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், ஸ்கால்ப்பில் செல் சேதத்தை சரிசெய்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. சிறப்பான பலனைப் பெற, நெல்லிக்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்த வேண்டும்.
முருங்கை எண்ணெய்
முருங்கை எண்ணெயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜனை அதிகம் பெற வழிவகை செய்கிறது. மேலும் இதில் உள்ள அர்ஜினைன், சிஸ்டைன், சிஸ்டைன், லைசின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் ஸ்கால்ப் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. இப்படிப்பட்ட எண்ணெயை வழுக்கைத் தலை விழும் ஆண்கள் தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், ஸ்கால்ப்பில் நல்ல முடி வளர்ச்சியைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
