Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
Hair Fall Tips: உங்க முடி ஓவரா கொட்டுதா? அப்ப இந்த பொருட்களை தினமும் சாப்பிடுங்க... டக்குனு நின்னுரும்...!
Hair Fall Tips: மரபியல், மன அழுத்தம், நாள்பட்ட நோய் பாதிப்பு அல்லது அறுவை சிகிச்சை, சில மருந்துகள் அல்லது மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றால் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படலாம். முடி உதிர்தல் கர்ப்பம், எடை இழப்பு, தைராய்டு கோளாறுகள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது பெண்களின் வயது முதிர்ச்சி ஆகியவற்றாலும் ஏற்படலாம்.
இந்த பிரச்சனையை சரி செய்ய சில ஊட்டச்சத்துக்கள் அவசியமானவையாக உள்ளன. இந்த பதிவில் முடி உதிர்வை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவை நிறைந்துள்ள உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பயோட்டின்
இது உரோமக்கால்களில் தூண்டுதலை ஏற்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது இறைச்சி, கல்லீரல், முட்டை, சால்மன், பன்றி இறைச்சி, சூரியகாந்தி விதைகள், இனிப்பு உருளைக்கிழங்கு, பாதாம், மற்றும் முழு தானியங்களில் அதிக அளவில் இருக்கிறது.
கரோட்டினாய்டுகள்
இது முடி உதிர்வதைத் தடுக்கவும், புதிய முடியை மீண்டும் வளர செய்யவும் உதவுகின்றன. மிகவும் பொதுவான கரோட்டினாய்டுகளான பீட்டா கரோட்டின், லைகோபீன், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகும். கீரை, முட்டைக்கோஸ், சோளம், ஆரஞ்சு குடைமிளகாய், தக்காளி, தர்பூசணி, இளஞ்சிவப்பு திராட்சைப்பழம், பாகற்காய், ப்ரோக்கோலி மற்றும் கேரட் போன்ற பிரகாசமான நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் இதன் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
பொதுவாகவே நமது உடல் ஆரோக்கியத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நன்மை பயக்கக்கூடியவை. இவை நமது முடியின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகின்றன. இதில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக, செல் பழுதுகளை சரி செய்து, புதிய முடி மீண்டும் வளர உதவுகின்றன.இது இலவங்கப்பட்டை, முட்டை, பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள், கேரட், முழு தானியங்கள், சோயாபீன்ஸ், மற்றும் அவகேடோ போன்றவற்றில் நிரம்பி இருக்கின்றன.
வைட்டமின் ஏ
நமது உடல் பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. இது வறண்ட, மந்தமான முடி ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. இது உச்சந்தலையில் உள்ள சுரப்பிகளில் செபம் எனப்படும் எண்ணெய் திரவ உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இது முடி வறண்டு போகாமல் தடுக்க உதவுகிறது. இது கீரைகள், சிகப்பு குடைமிளகாய், கேரட், பூசணி, பாகற்காய், பப்பாளி மற்றும் மாம்பழம் போன்ற பிற ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் கிடைக்கின்றன.
வைட்டமின் பி
பி வைட்டமின்கள் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகின்றன. அவை உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கின்றன. இந்த செயல்முறையால் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. முழு தானியங்கள், பாதாம், இறைச்சி, மீன், கடல் உணவுகள் மற்றும் அடர் பச்சை காய்கறிகள் போன்ற பல்வேறு உணவுகளில் இருந்து பி வைட்டமின்களை பெறலாம்.
வைட்டமின் சி
எலுமிச்சை, ஆரஞ்சு, மற்றும் திராட்சைப் பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பெர்ரிகளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கொலாஜன் ஆகியவை முடியை வலுப்படுத்த உதவுகின்றன. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து உரோமக்கால்களைப் பாதுகாக்கின்றது.
வைட்டமின் பி12
முடி ஆரோக்கியம் முதல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் பி12 அவசியமாகும். வைட்டமின் பி12-ன் பொதுவான உணவு ஆதாரங்களாக முட்டை, இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள், மட்டி, சிப்பிகள் மற்றும் கோழி போன்ற பல்வேறு விலங்கு இறைச்சிகளில் அடங்கும்.



Click it and Unblock the Notifications

