Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
உங்க பாதம் வறண்டு போயி சொரசொரன்னு இருக்கா? அப்ப இத யூஸ் பண்ணுங்க...பூ மாறி மெதுமெதுனு ஆகிடுமாம்!
Foot Packs In Tamil: பொதுவாக நாம் முகம், கழுத்து மற்றும் கைப்பகுதி சருமத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். கால் பாதங்கள் பற்றி நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வதும் இல்லை, கவனிப்பதும் இல்லை. இதனால், பாத சருமம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம். இது கால் அழகை மட்டுமல்லாமல், கால் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உங்கள் கால்களில் வறண்ட சருமம் இருப்பது சங்கடமாகவும் அரிப்புடனும் இருக்கும். ஏனென்றால், உங்கள் காலில் உள்ள தோலில் உங்கள் உடலின் மற்ற பாகங்களைப் போல எண்ணெய் சுரப்பிகள் இல்லை. உங்கள் கால் சருமத்தில் இயற்கையான எண்ணெய்கள் குறைவாக இருப்பதால், அது விரைவில் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது.

இதிலிருந்து விடுபடுவதற்கான முதல் படி, உங்கள் பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருப்பதுதான். இது தவிர, வறண்ட, தடித்த பாத தோலை அகற்ற உதவும் சில கால் பேக்குகள் உள்ளன. வறண்ட பாத தோலில் இருந்து விடுபட உதவும் ஃபுட் பேக்குகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஊறவைத்த ஓட்ஸ் பேக்
கால்களில் உள்ள வறண்ட மற்றும் கடினமான சருமத்தை மென்மையாக்கவும், உரிக்கவும் ஓட்ஸ் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் பாதத்தை ஊறவைக்க, 1/2 கப் சமைக்காத ஓட்மீலை 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். அந்த கலவையில் உங்கள் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, ஓட்மீல் கொண்டு உங்கள் கால்களை மெதுவாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கால் பேக்
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஃபுட் பேக் உங்கள் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. ஒரு சிறிய கிண்ணத்தில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். கலவையை உங்கள் கால்களில் தடவி, தோலில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
அந்த பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரே இரவு முழுவதும் பேக்கை அப்படியே விட்டு விடுங்கள். காலையில், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
அவகேடா மற்றும் வாழைப்பழ கால் பேக்
அவகேடா மற்றும் வாழைப்பழங்கள் இரண்டும் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் சிறந்த ஆதாரங்கள்.
இந்த ஃபுட் பேக் செய்ய, பழுத்த அவகேடாவில் 1/2 மற்றும் பழுத்த வாழைப்பழத்தில் 1/2 ஆகியவற்றை ஒன்றாக மசிக்க வேண்டும். கலவையை உங்கள் கால்களில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பிறகு, உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இறுதிக் குறிப்பு
பெரும்பலான மக்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக வறண்ட, தடிமனான பாதத்தின் தோல் உள்ளது. குறிப்பாக குளிர்கால மாதங்களில், இவை அதிகரிக்கலாம். இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அதாவது தவறான வகை காலணிகளை அணிவது, கால்களை தவறாமல் ஈரப்பதமாக்குவது அல்லது சருமத்தை பாதிக்கும் மருத்துவ நிலை போன்றவை. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம்.



Click it and Unblock the Notifications
