Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்புகளை வீட்டிலேயே தடுப்பது எப்படி? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் மீனா...!
Skin Care Tips: குளிர்காலம் வந்தாலே பெரும்பாலும் பெண்கள் சரும பராமரிப்பையை மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளின் உடல்நிலை, குடும்பத்தினர் உடல்நிலை, அல்லது அவர்களின் உடல்நிலை சார்ந்த கோளாறுகள் என்று இந்த குளிர்காலம் அவர்களை ஒரு பாடுபடுத்தி விடுவதே இதற்கு காரணம். சிலருக்கு இந்த குளிர்காலத்தில் பல சரும பிரச்சனைகள் வந்தாலும் கண்டு கொள்வதில்லை.
வெயிலில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது எவ்வளவு அவசியமோ, அதே போல் குளிர்காலத்திலும் சரும பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள செய்ய உதவும் வழிகளைநம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அழகுக்கலை நிபுணர் அழகுக்கலை நிபுணர் மீனா.

கிளென்சிங்
தேவையான பொருட்கள்:
பால் - 2 ஸ்பூன்
பஞ்சு - சிறிதளவு
செய்முறை:
நீங்கள் தினமும் பயன்படுத்தும் சோப் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தமாக கழுவவும். முகம் கழுவி கொஞ்சம் நேரம் தான் ஆகுது என்றாலும் பரவாயில்லை மீண்டும் சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். பின் காய்ச்சா பச்சை பாலை எடுத்து சுத்தமான பஞ்சில் நனைத்து நன்றாக முகத்தில் தேய்க்கவும்.
மூக்கின் மேற்பரப்பில் கரும்புள்ளிகள் இருக்கும் இடம், கண்களின் அடிப்பகுதியில் கருவளையம் இருக்கும் இடம், மற்றும் கருமை அடர்ந்த பகுதிகளில் நன்கு அழுத்தி தேய்க்கவும். முகத்தில் இருக்கும் அழுக்குகள், மற்றும் இறந்த செல்களை நீக்குவதில் பால் பெரிதும் உதவுகிறது.
ஸ்க்ரப்
தேவையான பொருட்கள்:
தக்காளி பழம் - 1 அல்லது 2
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு தக்காளி பழத்தை நன்றாக பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். தேவைப்பட்டால் 2 அல்லது மூன்று தக்காளி பழம் வரை பிழிந்து தேவையான அளவிற்கு எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பின் இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை கழுவாமல் அடுத்த ஸ்டீமிங் செய்முறையை செய்யவும்.
ஸ்டீமிங்
தேவையான பொருட்கள்:
தண்ணீர் சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை மிதமாக கொதிக்க வைத்து, ஆவி பிடித்து கொள்ளுங்கள். அல்லது ஒரு தேங்காய் பூ துண்டை சூடான தண்ணீரில் நனைத்து பிழிந்து சூடாக முகத்தின் மீது போடவும். பின் ஒரு சுத்தமான துணியால் முகத்தை துடைக்கவும்.
மசாஜ்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
செய்முறை:
உருளைக்கிழங்கை நீளவாக்கில் வெட்டி சாறு வரும்படி நடுவில் கோடுகளாக கீறி முகத்தில் நன்கு தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்யவும். இதே போல் மீதம் இருக்கும் உருளைக்கிழங்கையும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். அல்லது உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். முகத்தில் மூன்று அல்லது நான்கு முறை தேய்த்து 15-20 நிமிடங்கள் நன்றாக உலர விடவும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி உங்கள் முகத்தை பிரகாசமாக்குகிறது.
பேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
ஆலோவ் வேரா ஜெல்(கற்றாழை ஜெல்) - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வீட்டில் இருக்கும் ஓட்ஸை பொடி செய்து 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். கற்றாழைக்கு பதிலாக பால் கூட பயன்படுத்தலாம். பின் இந்த கலவையை முகத்தில் பூசி 15-20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின் முகத்தை சுத்தமான துணியால் துடைத்து பகலில் என்றால் சன் ஸ்க்ரீன் போடவும். இரவில் என்றால் தேங்காய் எண்ணையை பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications
