சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த பாட்டி வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...

Skin Whitening Tips: ஒவ்வொருவரும் நல்ல பொலிவான மற்றும் மென்மையான சருமத்தையே பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் ஏராளமான கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் தற்போது கோடைக்காலம் என்பதால், சருமத்திற்கு சூரியனிடம் இருந்து பாதுகாப்பை அளிக்கவும், சருமத்தை பராமரிப்புக்கவும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம்.

ஆனால் அனைவராலும் இப்படி பணம் அதிகம் கொடுத்து அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாது. மேலும் சிலருக்கு கெமிக்கல் கலந்த பொருட்கள் சேராது. இந்நிலையில் இயற்கை வழிகள் தான் சிறந்தது. அதுவும் நம் பாட்டிமார்கள் அக்காலத்தில் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து வந்தனர்.

Effective Skin Whitening Granny Remedies You Can Try This Summer

இந்த பொருட்கள் சருமத்திற்கு நல்ல பொலிவையும், நிறத்தையும் வழங்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட காலம் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. நீங்கள் இந்த கோடையில் உங்கள் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து, சரும நிறத்தை அதிகரிக்க நினைத்தால், பின்வரும் சில பாட்டி வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

1. எலுமிச்சை மற்றும் தேன்

* எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை வெள்ளையாக்க உதவுகின்றன. அதே சமயம் தேன் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. இவ்விரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

* அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் தேனை 1:1 என்ற விகிதத்தில் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. மஞ்சள் மற்றும் தயிர் மாஸ்க்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளன. அதே சமயம் தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இவ்விரண்டையும் சேர்த்து சருமத்திற்கு மாஸ்க் போடும் போது, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் சரியாவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.

* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, முகம் பிரகாசமாக இருக்கும்.
* இன்னும் சிறப்பான பலன் பெற, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ள வேண்டும்.

3. கற்றாழை ஜெல்

கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகை செடி அனைவரும் அறிவோம். இதில் சத்துக்கள் அதிகம் உள்ளன மற்றும் இதில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் வைட்டமின்கள், நொதிகள், பொட்டாயிம், பாண்டோதெனிக் அமிலம், ஜிங்க், காப்பர், கொழுப்பு அமிலங்கள், எல்-அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளன. இந்த கற்றாழை ஜெல்லை சருமத்தில் தினமும் பயன்படுத்தி வர, சரும நிறம் மேம்படுவதைக் காணலாம்.

* அதற்கு கற்றாழை ஜெல்லை அதன் இலையில் இருந்து பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், 1 மாதத்தில் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

4. உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாற்றில் சரும நிறத்தை மேம்படுத்த உதவும் நொதிகள் உள்ளன. இந்த உருளைக்கிழங்கு சாற்றினை சருமத்தில் பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். மேலும் இதில் குளிர்ச்சி பண்புகளும் உள்ளன. கோடையில் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இதை பயன்படுத்துவது நல்லது.

* அதற்கு உருளைக்கிழங்கை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சாற்றினை சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலனைப் பெறலாம்.

5. கடலை மாவு மற்றும் பால்

பழங்காலம் முதலாக சரும அழகைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் கடலை மாவு. இந்த கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். அதே சமயம் பால் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். இவ்விரண்டையும் சருமத்தில் பயன்படுத்தி வர சரும நிறம் மேம்படும்.

* அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

6. வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒன்று தான் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது மற்றும் குளிர்ச்சியானது. இதை சருமத்தில் பயன்படுத்தி வந்தால், சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட நிறமாற்றத்தை சரிசெய்யலாம்.

* அதற்கு வெள்ளரிக்காயை துருவி, அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சாற்றினை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வர, சருமம் எப்போதும் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

7. ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிர்

ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது சருமத்தை வெள்ளையாக்க உதவும். அதே சமயம் தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டது. இவ்விரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பொடியை எடுத்துக் கொண்டு, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, April 23, 2025, 20:21 [IST]
Desktop Bottom Promotion