உதடு ரொம்ப வறண்டு போகுதா? அப்ப நைட் டைம்-ல இந்த லிப் மாஸ்க் போடுங்க..

லிப் மாஸ்க்கை குளிர்காலங்களில் இரவு நேரத்தில் பயன்படுத்தினால், குளிர்காலத்தில் சந்திக்கும் உதட்டு வறட்சியைத் தடுக்கலாம். கீழே ஒருசில எளிமையான லிப் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குளிர்காலங்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் உதடு வறட்சி. ஒருவரது உதடுகள் வறண்டு போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் குளிர்ச்சியான மற்றும் வறண்ட காலநிலை, சூரியக்கதிர்கள் மற்றும் அடிக்கடி உதடுகளை நாக்கினால் நக்குவது போன்றவை அடங்கும். இவற்றால் உதடுகள் வறண்டு போவதோடு, வெடிப்புக்களும் ஏற்படும். குறிப்பாக குளிர்காலங்களில் உதடு வறட்சியால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உதடு வறட்சியையும், வெடிப்பையும் தடுக்க பலர் லிப் பாம் பயன்படுத்துவதுண்டு.

Lip Masks For Dry And ChappedLips In Tamil

ஆனால் உதடுகளுக்கு ஈரப்பதமூட்ட லிப் பாம்களை மட்டும் பயன்படுத்தாமல், ஒருசில லிப் மாஸ்க்கை ஓய்வு நேரங்களில் பயன்படுத்துங்கள். இதனால் உதட்டு வறட்சி தடுக்கப்படுவதோடு, உதடுகள் மென்மையாக பட்டுப்போன்றும் இருக்கும். இந்த லிப் மாஸ்க்கை குளிர்காலங்களில் இரவு நேரத்தில் பயன்படுத்தினால், குளிர்காலத்தில் சந்திக்கும் உதட்டு வறட்சியைத் தடுக்கலாம். கீழே ஒருசில எளிமையான லிப் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிப் மாஸ்க் #1

லிப் மாஸ்க் #1

ஒரு பௌலில் சர்க்கரையை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரால் உதடுகளை மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, உதடுகளும் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

லிப் மாஸ்க் #2

லிப் மாஸ்க் #2

உங்கள் வீட்டில் ஸ்ட்ராபெர்ரி அல்லது கிவி இருந்தால், அதை மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் சிறிது காபித் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதன் மூலம், உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படுவதோடு, உதடுகள் ஈரப்பதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

லிப் மாஸ்க் #3

லிப் மாஸ்க் #3

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதடுகளில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் உதடுகளை வெதுவெதுப்பான நீரால் கழுவிய பின், உதடுகளுக்கு லிப் பாம் பயன்படுத்த வேண்டும்.

லிப் மாஸ்க் #4

லிப் மாஸ்க் #4

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 3/4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை உதடுகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 5 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் உதடுகளை கழுவ வேண்டும். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால், உதடுகளில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

லிப் மாஸ்க் #5

லிப் மாஸ்க் #5

முதலில் பாதி கிவி பழத்தை எடுத்து பிளெண்டரில் போட்டு, அத்துடன் 1 ஸ்ட்ராபெர்ரி பழத்தை போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அதில் 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை உதடுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த லிப் மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை போட, உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

லிப் மாஸ்க் #6

லிப் மாஸ்க் #6

உதடுகள் அதிகம் வறட்சியடைகிறதா? அப்படியானால் 2 டீஸ்பூன் மசித்த அவகேடோ பழத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதடுகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உதட்டு வறட்சி நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, November 28, 2022, 19:09 [IST]
Desktop Bottom Promotion