For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிச்சு முடிச்ச பின்கூட சில சமயங்களில் சருமம் அரிக்குதே அது ஏன்னு தெரியுமா?...

குளித்த பின்னர் தோளில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குளித்தல் என்பது நமது காலைக் கடன்களில் முதலாவதும், தலையாயதும் ஆகும்.

By Bharathika @sivakumar
|

குளித்த பின்னர் தோளில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
குளித்தல் என்பது நமது காலைக் கடன்களில் முதலாவதும், தலையாயதும் ஆகும்.

bathing tips in tamil

குளிப்பது என்பது உடலின் அழுக்கை போக்குவது மட்டுமல்லாது உடலும் உடலுறுப்புகளும் குளிர்ச்சி பெற உதவுகிறது. இந்தியா போன்ற வெப்பமயமான நாடுகளில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இருமுறை, ஏன் பலமுறை கூட குளிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளியல்

குளியல்

உடலுழைப்பில் பிழைக்கும் பலர் வியர்வை, தூசு, மண் மற்றும் புழுதிகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குளிப்பதால் உடலின் தங்கியிருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் களையப்படுகின்றன. குளித்த பின்னரும் சில வேளைகளில் அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்ற தன்மைகள் சிலருக்கு ஏற்படும். அவ்வாறு எற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

எண்ணெய்கள் பற்றாக்குறை

எண்ணெய்கள் பற்றாக்குறை

நமது உடலிலுள்ள சுரப்பிகள் சருமத்தை காக்கவேண்டி இயற்கையாக சில வேதிப்பொருள் எண்ணையை நமது உடலே உற்பத்தி செய்கிறது. அவை நமது சருமத்தை வெளிப்புறத் தாக்குதலிலிருந்து காக்கின்றன.

நாம் அதிக சூடான தண்ணீரில் குளிக்கும் போதோ, நீண்ட நேர நீச்சல் பயிற்சி அல்லது குளியலின் போதோ, இந்த இயற்கை சருமஎண்ணைகள் களையப்படுகின்றன. அவ்வாறு இயற்கை பாதுகாப்பற்ற சூழ்னிலை வரும்பொது, நமது சருமத்தில் அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் முதலியவை ஏற்படும்.

சருமத்தில் பாக்டீரியா/ நுண்ணுயிரிகள்

சருமத்தில் பாக்டீரியா/ நுண்ணுயிரிகள்

சருமத்தில் பேக்டீரியா/நுண்ணுயிரிகள் அல்லது fபங்கள் தாக்குதல் பிரச்சினை இருந்தாலும், அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் முதலியவை ஏற்படும்.

அல்ர்ஜி - ஒவ்வாமை

அல்ர்ஜி - ஒவ்வாமை

நீங்கள் உபயோகிக்கும் சோப்புகளினாலும் அரிப்பு, தடிப்பு மற்றும் பல பிரச்சினைகள் ஏற்படும். சோப்புகளில் இருக்கும் வேதி இரசாயணப் பொருட்கள், உடலுக்கு ஒவ்வாமை (அல்ர்ஜி)யை ஏற்படுத்தி சருமப் பிரச்சினைகளை உண்டாக்கும். அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் முதலியவை ஏற்படும்.

மருத்துவ ரீதியான சருமப் பாதிப்புகள்

மருத்துவ ரீதியான சருமப் பாதிப்புகள்

மருத்துவ ரீதியாக சருமப் பாதிப்புகள் பலவகையாகப் பகுத்தறியப்படுகின்றன. அவற்றின் வகைகளையும் அதன் பாதிப்புகளையும் இங்கே காண்போம்.

ஜெரோசிஸ்

ஜெரோசிஸ்

இந்த வகை சருமப் பிரச்சினை அனைத்து வயதினருக்கும் வரக்க்கூடிய சிறு பிரச்சினைதான். ஆனால் மூத்தக் குடிமக்களை வெகு சாதாரணமாக தாக்கக் கூடிய பாதிப்பு இது. தோல் வறண்டு போய் அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் முதலியவை ஏற்படும்.

பாலிசிதேமியா வேரா

பாலிசிதேமியா வேரா

இது எலும்பு மஜ்ஜையில் ஏற்ப்படும் ஒரு பிரச்சினையாகும். நமது சிவப்பு இரத்த கட்டுக்கடங்காத உற்பத்தி இதன் அடிப்படைக் காரணமாகும். இந்த பாதிப்பினால் தோலில் ஒவ்வாமை ஏற்படும்.

தீர்வுகள்

தீர்வுகள்

தோலில் எரிச்சல் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஏரிச்சலுக்கான லோஷன்களையோ, எண்ணைகளையோ உபயோகிக்கலாம்.

மேலும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தோல் நோய் நிபுணரை அனுகவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why you itch after taking a shower

Bathing itself can wash all the natural oils from your body. And when taking a shower in hot water can irritate the skin.
Story first published: Monday, July 16, 2018, 18:31 [IST]
Desktop Bottom Promotion