TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
நீங்க போடும் ஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்தினால் முடிக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா?
உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கொஞ்சமாய் பயன்படுத்த வேண்டுமென்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அழகிற்கு அப்படி அவசியமில்லை. காரணம் சருமத்திற்கும் சரி, அழகிற்கும் சரி பலவித அற்புதங்களை தருகிறது.
பொடுகினை முற்றிலும் தடுக்கவும், கிருமிகளின் தொற்றை நீக்கவும் உப்பு முக்கியமாக பயன்படுகிறது. அதுபோல் சருமத்திற்கும் பலவித நன்மைகளை தருகிறது. முகப்பருக்களையும் கருமையையும் போக்க உப்பு உதவுகிறது.
எண்ணெய் சருமத்தினை உப்பு கட்டுப்படுத்தும். அதோடு காயங்கள், சூட்டு காயங்களுக்கும் மருந்தாக உப்பு பயன்படுத்தும். உப்பை தனியாக பயன்படுத்துவதை விட அதனுடன் மற்ற அழகுக் பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் விரைவில் பலன் தரும்.
நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டாம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பயன்படுத்தினால் உங்கள் கூந்தலுக்கு என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கு :
முடி வளர்ச்சியை உப்பு தூண்டுகிறது. முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது வரபிரசாதம். உப்பு சிறிதை ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்திப் பாருங்கள். முடி வேகமாய் வளர்வது தூண்டப்படும். முடி உதிர்வு கட்டுப்படுத்துகிறது.
பொடுகு :
பொடுகுத் தொல்லை அறவே நீங்கி விடும். உப்பு ஒரு கிருமி நாசினி. ஆகவே பொடுகிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. பொடுகு காரணமாக உண்டாகும் முடி உதிர்வு, அரிப்பு போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு காணலாம்.
எண்ணெய் கூந்தல் :
உங்களுக்கு எண்ணெய் கூந்தலென்றால் இது மிகச் சிறப்பான தேர்வு. எண்ணெய் ஸ்கால்ப் மற்றும் எண்ணெய் கூந்தலுக்கு உந்த உப்பு கலந்த ஷாம்புவை பயன்படுத்துங்கள். இது அதிக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமான கூந்தல் வளரும்.
மிருதுவான கூந்தல் :
சிலருக்கு கூந்தல் கரடுமுரடாக இருக்கும். மென்மையாகவே இருக்காது. அவரகள் இந்த ஷாம்புவை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கூந்தல் மிருதுத் தன்மை பெறும். பளபளப்பாக மாறும்.
பாடி ஸ்க்ரப் :
உங்கள் உடலுக்கு ஸ்க்ரப்பாகவும் உப்பை பயன்படுத்தலாம். இது இறந்த செல்களை உடலிலிருந்து நீக்குவதால் சரும அலர்ஜி மற்றும் வயது முதிர்ச்சியை தடுக்கலாம். சருமத்தில் அழுக்கு சேர்வதை உப்பு தடுக்கிறது.
மென்மையான சருமம் :
சருமம் சிலருக்கு தடிப்பாகவும் , மேடுபள்ளமாகவும் இருக்கும். அவர்கள் உப்பு பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகிறது. ஒரு ஸ்பூன் ஆலில் எண்ணெயுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகும்.
முகப்பருக்கள் நீங்க :
எலுமிச்சை சாறு, தயிர் இர்ண்டையும் தலா 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு உப்பு கலந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த குறிப்பை தவறாமல் செய்தால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாது. மென்மையாக முகம் மாறும்.
பளபளப்பான சருமம் :
அரை ஸ்பூன் உப்பை 1 ஸ்பூன் தேபில் கலந்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இது சுருக்கம் கன்னத்தில் இருக்கும் மெல்லிய கோடுகள் போன்றவற்றை நீக்குகிறது. வாரம் 3 நாட்கள் செய்தால் சருமம் இளமையாகவும் இருக்கும்.
குளியலுக்கு :
தினமும் குளிக்கும்போது நீரில் அரை ஸ்பூன் உப்பு மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் சருமம் சம்பந்தப் பட்ட எந்த பிரச்சனையும் உங்களை அணுகாது. கிருமிகள், வியர்வை நாற்றம் எல்லாம் மறைந்துவிடும்.
வீங்கிய கண்களுக்கு :
சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் சில சமயம் கண்களுக்கு அடியில் ரப்பை வீங்கிக் கொள்ளும். இதனால் வயதான தோற்றம் கிடைக்கும். இதனை தவிர்க்க, உப்பை சிறிது நீரில் கரைத்து, அந்த உப்புக் கரைசலை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சில நாட்களில் பழையபடி கண்களின் தோற்றத்தை பெறுவீர்கள்.