பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ!

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும்? இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.

Simple And Efficient Ways To Get White Teeth Overnight

உங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

* 1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை வேளையில் செய்ய வேண்டும்.

* ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோல்

* வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

* தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு, 10 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும்.

* பின் அந்த எண்ணெயை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெண்மையாக இருக்கும்.

ஆரஞ்சு ஆயில்

ஆரஞ்சு ஆயில்

* காலையில் பற்களைத் துலக்கும் போது, பேஸ்ட்டுடன் ஆரஞ்சு ஆயிலை 2-3 துளிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும்.

* இப்படி காலை மற்றும் இரவு நேரத்தில் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

* 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயினுள் விட்டு 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இச்செயலை செய்ய வேண்டும்.

* பின்பு 20 நிமிடம் கழித்து எண்ணெயை வாயில் இருந்து வெளியேற்றி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்த நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.

* பின் எப்போதும் போன்று பிரஷ் செய்யுங்கள். இச்செயலால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.

சாம்பல்

சாம்பல்

* சாம்பல் கிடைத்தால், அதை கை விரலால் தொட்டு பற்களை 2 நிமிடம் துலக்க வேண்டும்.

* பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய, சாம்பல் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் மஞ்சள் கறைகளை உறிஞ்சி வெளியேற்றி, பற்களை வெண்மையாக காட்டும்.

பெராக்ஸைடு

பெராக்ஸைடு

* 1 கப் 2-3.5% ஹைட்ரஜென் பெராக்ஸைடை, 1 கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த நீரை வாயில் விட்டு 30-40 நொடிகள் கொப்பளித்து துப்ப வேண்டும்.

* பின்பு சாதாரண நீரால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பற்கள் வெண்மையாகவும் வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

எலுமிச்சை மற்றும் உப்பு

எலுமிச்சை மற்றும் உப்பு

* 1 டீஸ்பூன் உப்பில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பற்களில் தடவி மென்மையாக தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 1 முறை செய்தால், பற்களில் அசிங்கமாக இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். முக்கியமாக இந்த முறையை அடிக்கடி செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

மஞ்சள்

மஞ்சள்

* சிறிது மஞ்சள் தூளை டூத் பிரஷில் தூவி, பற்களைத் தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து மீண்டும் துலக்கி நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* இப்படி ஒருமுறை செய்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகன்று இருப்பதை நன்கு காணலாம். மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஈறுகளில் உள்ள தொற்றுக்களை நீக்கி, வாய் துர்நாற்றத்தையும், ஈறு பிரச்சனைகளையும் தடுக்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

* 1 பகுதி எப்சம் உப்பு 1 பகுதி நீரில் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த நீரில் நனைத்த பிரஷ் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

* எஞ்சிய நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதன்பின் சாதாரண நீரால் வாயைக் கொப்பளியுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகள்

* 1-2 கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அந்த பேஸ்ட் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும்.

* அதைத் தொடர்ந்து நீரால் வாயைக் கொப்பளித்து, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்குங்கள்.

* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், பற்கள் வெண்மையாக இருக்கும்.

வேப்பிலை

வேப்பிலை

* 4-5 வேப்பிலையை 1 1/2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதனை வடிகட்டி குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரால் பற்களைத் துலக்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.

* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வாய் துர்நாற்றமும் நீங்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

* ஆரஞ்சு தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும்.

* பின் பிரஷ் கொண்டு எப்போதும் போன்று டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள்.

* இப்படி ஒரு வாரம் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

* 1 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையைக் கொண்டு பற்களைத் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதைத் தொடர்ந்து எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும்.

* இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple And Efficient Ways To Get White Teeth Overnight

Here are some simple and effective ways to get white teeth overnight. Read on to know more...
Story first published: Tuesday, January 30, 2018, 14:20 [IST]
Subscribe Newsletter