For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்தப்புரத்தில் உள்ள ராணிகளை கவர இந்திய ராஜாக்கள் என்னென்ன செய்தார்கள்னு தெரியுமா..?

|

கால மாற்றம் என்பது எப்போதும் ஏற்பட கூடிய ஒரு மாறா நிகழ்வாகும். "மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற நிதர்சன வார்த்தைக்கு ஏற்ப, இங்கு எல்லா காலங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. இன்று நடக்கின்ற செயல்களை பற்றி நமக்கு நன்கு தெரியும்.

இதுவே சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றி நிச்சயம் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அந்த காலத்தில் ராஜாக்கள் மற்றும் ராணிகள் என்னென்ன செய்தார்கள் என்ற தகவல் நமக்கு நிச்சயம் தெரியாது. இவர்களின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதே இந்த பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர்ம முறைகளா..?

மர்ம முறைகளா..?

உண்மைதாங்க, ராஜாக்கள் மற்றும் ராணிகள் தங்களது வாழ்வில் பல வகையான மர்மங்களை அப்படியே இரகசியாக வைத்து வந்தனர். இதில் அவர்கள் பயன்படுத்திய, பிறரை கவர கூடிய செயல்கள் தான் அதி அற்புதமானது என இன்றளவும் பல்வேறு கல்வெட்டுகள் சொல்கிறது.

கட்டுமஸ்தான உடல் அழகிற்கு...

கட்டுமஸ்தான உடல் அழகிற்கு...

ராஜாக்கள் தங்களது உணவில் ஒரு அற்புத ரகசிய பொருளை சேர்த்து கொள்வார்களாம். அது வேறெதுவும் இல்லை. அதிக காரத்தை கொண்ட சிவப்பு மிளகாய் தான் அது. உடல் எடையை சீராக வைத்து கொள்வதற்கு உணவில் அதிகமான மிளகாயை சேர்த்து கொள்வார்களாம். இதனால், உடல் எடை கூடாமலே இருக்குமாம்.

வெங்காய முறை

வெங்காய முறை

ராஜாக்கள் தங்களது அந்தபுரத்தில் உள்ள அனைத்து ராணிகளையும் கவர ஒரு சில எளிய வழிகளை கொண்ட முக பூச்சுகளை செய்து வருவார்களாம். குறிப்பாக வெங்காயம், தேன், வேம்பு ஆகியவற்றை பயன்படுத்தியே இந்த முறையை செய்வார்கள்.

செய்முறை :-

செய்முறை :-

அதற்காக, முதலில் வெங்காயாம் மற்றும் வேம்பை தனி தனியாக அரைத்து கொண்டு, இவற்றின் சாற்றை தனியாக எடுத்து கொள்வார்களாம். பிறகு இதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து முகத்தை கழுவிய பின்னரே ராணிகளை பார்க்க செல்வார்களாம். இந்த முறை முகப்பருக்கள் அற்ற பொலிவான முகத்தை தருமாம்.

MOST READ: இவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது..!

பேரழகு கொண்ட ராஜாக்கள்..!

பேரழகு கொண்ட ராஜாக்கள்..!

இன்று நாம் பயன்படுத்துவது போல எந்த வித வேதி பொருளையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கை வழியையே பின்பற்றினார்கள். பேரழகுடன் இருக்க கடலை மாவு, பால், சந்தனம் ஆகியவற்றையே உபயோகித்தனர்.

செய்முறை :-

செய்முறை :-

இதனை தயாரிக்க, முதலில் கடலை மாவு மற்றும் சந்தனத்தை நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் பாலை சேர்த்து பேஸ்ட் போல செய்து கொண்டு உடல் முழுக்க தேய்த்த பின்னரே குளிக்க செல்வார்கள். உடலையும் முகத்தையும் நன்றாக தேய்த்து குளித்து விட்டு ராணிகளை சந்திக்க செல்வார்கள்.

சந்தன கட்டை ராஜாக்கள்...!

சந்தன கட்டை ராஜாக்கள்...!

பெரும்பாலும் அந்த காலத்து ராஜாக்கள் ராணிகளை பார்க்க செல்லும் முன்னர் சந்தனம் பயன்படுத்தி குளித்து விட்ட பின்னரே செல்வார்கள். மேலும், முகத்தை இரம்மியமாக வைத்து கொள்ள தயிர், சந்தனம், மஞ்சள் தூள் போன்றவற்றை உபயோகித்தனர்.

செய்முறை :-

செய்முறை :-

ரம்மியமான அழகை பெறுவதற்கு, முதலில் மஞ்சளை தூளாக்கி கொண்டு, பிறகு சந்தனத்தை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தேய்ந்து விட்டு குளித்த பின்னரே ராணியை பார்க்க செல்வார்கள்.

MOST READ: கல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..!

மினுமினுப்பான பொலிவிற்கு

மினுமினுப்பான பொலிவிற்கு

ராணிகளை, தங்கள் அழகில் மயங்க செய்ய பல ராஜாக்களும் அக்காலத்தில் எண்ணற்ற அழகு குறிப்புகளை உபயோகித்தனர். அதில் முக்கியமான ஒன்றுதான் முல்தானி மட்டி. தக்காளியுடன் முல்தானி மட்டியை கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனுடன் சிறிது மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து உடலில் பூசி குளிப்பார்களாம். இதுதான் ராஜாக்கள் ராணிகளை கவர்ந்திழுக்க செய்யும் முக்கிய குறிப்பாம்.

கூந்தல் அழகிற்கு

கூந்தல் அழகிற்கு

அந்த காலத்து ராஜாக்களின் முடிகள் மிகவும் மிருதுவாகவும், கருமையாகவும் இருக்கும். இதற்கு முழு காரணமும் அவர்கள் இயற்கை பொருட்களை பயன்படுத்தியதால் தான். முடியை எப்போதும் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தலைக்கு தேய்த்து குளிப்பார்களாம். இவற்றில் ஏராளமான போஷாக்குகள் இருந்ததால் முடியின் வளர்ச்சியும் நன்கு இருந்தது.

பொற்பாத அழகிற்கு :-

பொற்பாத அழகிற்கு :-

முகத்தை மட்டும் ராஜாக்கள் அழகு செய்து கொள்ளவில்லை. மாறாக முழு உடலையும் அழகு செய்து கொண்டனர். குறிப்பாக அவர்களின் பொற்பாத அழகிற்கு தயிர் மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து பாதங்களில் தடவி வந்தனர். இது பாதங்களை மிக அழகாக வைப்பதுடன், மென்மையான தோற்றத்தையும் தருமாம்.

வாசனை திரவியங்கள்

வாசனை திரவியங்கள்

ராஜாக்களின் அருகில் சென்றவுடன் மணமனக்க வாசனை வரும். இதற்கு முழு காரணம் அவர்கள் பயன்படுத்திய வாசனை திரவியங்கள் தான். மல்லிகை, ரோஜா பூ, லாவெண்டர், ரோஸ்மேரி போன்ற பூக்களை கொண்டு வாசனை திரவியம் செய்து அதனை உடலில் அடித்து கொண்டனர். இதுவே ராணிகளை கட்டி இழுக்க கூடிய மணத்தை தந்தது.

நீண்ட இளமைக்கு...

நீண்ட இளமைக்கு...

ராஜாக்கள் அதிக காலம் இளமையுடன் இருக்க ஒரு சில முக்கிய காரணிகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது, அவர்களின் இயற்கை ரீதியான அழகியல் சாதனங்களே. முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை பயன்படுத்தியதால் தான் ராஜாக்கள் இத்துணை மயக்கும் அழகை பெற முடிந்தது.

மயக்கம் கண்கள்..!

மயக்கம் கண்கள்..!

மயக்க கூடிய கண்களை ராணிகள் பெறுவதற்கு பல யுத்திகளை கடைபிடித்து வந்தனர். குறிப்பாக கூற போனால், கண்ணில் மை வைத்து கொண்டு ராஜாக்களை மயக்க செய்தார்களாம். இதற்காக ஆமணக்கு எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ancient Indian Kings Ayurvedic Beauty Secrets

India has all types of people living in all kinds of places from a dusty dessert to tropical forests. Archaeologists have found makeup on buried humans, beauty tools in their graves.