அந்தரங்க பகுதியில் அதிக வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

அந்தரங்கப் பகுதியைச் சுற்றி வியர்ப்பது என்பது ஒரு பொதுவான இயற்கை நிகழ்வு. மேலும் இப்பகுதியில் வியர்வை சுரப்பிகள் உள்ளதோடு, காற்றோட்டமும் குறைவாக இருப்பதால், மற்ற பகுதிகளை விட, அந்தரங்க பகுதியில் அதிகமாகவே வியர்க்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது இன்னும் அதிகமாக வியர்வை வெளியேறும்.

Ways To Prevent Sweat And Odour In The Bikini Area

அந்தரங்க பகுதியில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், அப்பகுதியில் துர்நாற்றமும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இதைத் தடுக்க சில வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் அதிக வியர்வையால் அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி உள்ளாடையை மாற்றவும்

அடிக்கடி உள்ளாடையை மாற்றவும்

அந்தரங்க பகுதி உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால், ஒரு நாளைக்கு 2-3 முறை உள்ளாடையை மாற்றுங்கள். குறிப்பாக காட்டன் உள்ளாடையைப் பயன்படுத்துங்கள். இதனால் வியர்வை உறிஞ்சப்பட்டு, அந்தரங்க பகுதி எந்நேரமும் ஈரமாக இருப்பது தடுக்கப்படும்.

தளர்வான உள்ளாடை

தளர்வான உள்ளாடை

குறிப்பாக உடுத்தும் உள்ளாடை இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் அப்பகுதி சற்று காற்றோட்டத்துடன் இருப்பதோடு, அதிகம் வியர்க்காமலும் இருக்கும்.

சௌகரியமான உடை

சௌகரியமான உடை

கோடைக்காலத்தில் சிந்தடிக் மற்றும் நைலான் வகை உடைகளை தவிர்ப்பதோடு, இறுக்கமாக உடலை ஒட்டியவாறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக காட்டன் உடைகளை உடுத்துங்கள். இது சௌகரியமாக இருக்கும்.

ஆன்டிபர்ஸ்ஸ்பான்ட் டியோடரன்ட்

ஆன்டிபர்ஸ்ஸ்பான்ட் டியோடரன்ட்

அலுமினியம் குளோரைடு கொண்ட ஆன்டிபர்ஸ்ஸ்பான்ட் டியோடரன்ட்டைப் பயன்படுத்துங்கள். இது வியர்வை சுரப்பியை அடைத்து, அதிகம் வியர்ப்பதைத் தடுக்கும். முக்கியமாக இதைப் பயன்படுத்தும் போது, அப்பகுதியை 24 மணிநேரத்திற்கு ஷேவிங் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அப்பகுதி காயமாகிவிடும்.

ஆன்டி-பாக்டீரியல் சோப்பு

ஆன்டி-பாக்டீரியல் சோப்பு

அந்தரங்க பகுதி எப்போதுமே ஈரமாக இருந்தால், அங்கு பாக்டீரியல் மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே அப்பகுதியை ட்ரைகுளோசன் நிறைந்த ஆன்டி-பாக்டீரியல் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். இதனால் அப்பகுதியில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தடுக்கப்படும்.

சோள மாவு

சோள மாவு

அந்தரங்க பகுதியில் சோள மாவை தூவிக் கொள்ளுங்கள். இதனால் அந்த சோள மாவு அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Prevent Sweat And Odour In The Bikini Area

Here are some ways to prevent sweat and odour in the bikini area. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter