தினமும் ஒன்றரை ரூபாய் செலவில் உங்கள் முழு உடலையும் அழகுபடுத்தலாம்!

By: Lakshmi
Subscribe to Boldsky

வைட்டமின் ஈ ஆயில் சருமம் மற்றும் முகத்திற்கு மிகவும் சிறந்ததாகும். வைட்டமின் ஆயில் குழந்தைகளுக்கு உபயோகிக்கும் தயாரிப்புகள் மற்றும் நாம் தினமும் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருப்பதை பார்த்திருப்போம்.

வைட்டமின் ஈ ஆயில், கேப்சூல் மற்றும் ஆயில் வடிவில் கடைகளில் கிடைக்கிறது. இந்த ஆயில் நமக்கு பல்வேறு பலன்களை தருகிறது. இதை முகம், கை, கால்கள், தலைமுடிகளுக்கு பயன்படுத்தலாம்.

ஒரே வைட்டமின் ஆயில் நமக்கு பலவிதமான நன்மைகளை தருவதால், பல க்ரீம்களை வாங்கி பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இப்போது வைட்டமின் ஈ ஆயிலை எவ்வாறு பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலை மென்மையாக்க

உடலை மென்மையாக்க

இதனை ஸ்கின் சீரமாக பயன்படுத்தலாம். ஒரு வைட்டமின் ஈ கேப்சூலை உடைத்து, அதனுள் இருக்கும் ஆயிலை வெளியில் எடுக்கவும். பின்னர் 2 அல்லது 3 டிஸ்பூன் லாவெண்டர் ஆயிலை வைட்டமின் ஈ ஆயிலுடன் கலக்கவும். இது அனைத்து வகையான சருமத்திற்க்கும் சிறந்தது. வறண்ட சருமத்திற்கு ஈரப்பதமளிக்கும்.

கைகளுக்கான க்ரீம்

கைகளுக்கான க்ரீம்

இரண்டு அல்லது மூன்று துளிகள் வைட்டமின் ஈ ஆயிலுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து, தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் கைகளில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் கைகள் மென்மையாகும். மேலும் கைகளில் ஏதேனும் தழும்புகள் அல்லது வெட்டுக்கள் இருந்தால் குணமாகும்.

நகங்கள் வலிமையடைய

நகங்கள் வலிமையடைய

நகங்களை வலிமையாக வைத்துக்கொள்ள தினமும் இரவு நகங்களில் சிறிதளவு வைட்டமின் ஆயிலால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் நகங்கள் பொலிவு பெறுவதோடு, வலிமையும் அடையும்.

அண்டர் ஐ க்ரீம்

அண்டர் ஐ க்ரீம்

சிறிதளவு வைட்டமின் ஈ ஆயிலை ஆலிவ் ஆயிலுடன் கலந்து, கண்ணுக்கு கீழ் தடவி மசாஜ் செய்து வந்தால், கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் ஜொலிக்கும்.

கால்களுக்கான க்ரீம்

கால்களுக்கான க்ரீம்

அரை தேக்கரண்டி வாஸ்லின் (Vaseline) உடன் சிறிதளவு வைட்டமின் ஈ ஆயில் கலந்து

பாதங்கள் மற்றும் குதிகால்களில் தடவி வந்தால், பாதங்கள் மென்மையாகும். வெடிப்புகள் மறையும்.

தலைமுடிக்கான சீரம்

தலைமுடிக்கான சீரம்

காற்றில் பறக்கும் மென்மையான தலைமுடியை பெற, சிறிதளவு ஜோஜோபா (jojoba) ஆயிலுடன் 3 அல்லது 4 துளிகள் வைட்டமின் ஈ ஆயிலை கலந்து தலைமுடிகளில் மென்மையாக தேய்க்க வேண்டும். உடைந்த தலைமுடிகளில் தேய்த்து வந்தால், உடைந்த முடிகள் மென்மையாகும். வறண்ட தலைமுடியை கூட இது மென்மையாக மாற்றும். மேலும், சூரியனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தலைமுடியை காக்கும்.

தலை அரிக்கிறதா?

தலை அரிக்கிறதா?

தலையில் அரிப்பு ஏற்பட்டால் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், வைட்டமின் ஈ ஆயிலை கலந்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்தால் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

நைட் க்ரீம்

நைட் க்ரீம்

வைட்டமின் ஈ ஆயில் ஒரு சிறந்த நைட் க்ரீமாகவும் செயல்படுகிறது. வைட்டமின் ஈ ஆயிலை சிறிதளவு கிளிசரின் உடன் சேர்த்து பயன்படுத்தினால், வறண்ட சருமத்தை மென்மையாக்கும்.

அல்லது உங்கள் தினசரி ஃபேர்னஸ் க்ரீம் உடன் சில துளிகள் வைட்டமின் ஈ ஆயில் கலந்து அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஈ ஆயில் மிக குறைந்த செலவில், பல அற்புதமான பலன்களை தரவல்லது. இதனை பயன்படுத்துவதால், நீங்கள் கெமிக்கல்கள் நிறைந்த தயாரிப்புகளில் இருந்து விடுபடலாம். உங்கள் பணமும் மிச்சமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vitamin E Oil Capsule for Beauty

here are the tips for how to use vitamin E capsule for beauty
Please Wait while comments are loading...
Subscribe Newsletter