For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்டம், தொடை போன்ற பகுதிகளில் அசிங்கமாக கோடுகள் வர இவைகள் தான் காரணம் என தெரியுமா?

இங்கு அசிங்கமான செல்லுலைட்டை உண்டாக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

ஒல்லியாக, ஃபிட்டாக இருந்தாலும் சருமத்தில் அசிங்கமா செல்லுலைட் வருகிறதா? செல்லுலைட் வருவதற்கு அதிகப்படியான கொழுப்புக்கள் தான் காரணம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் செல்லுலைட் உருவாவதற்கு வேறுசில காரணிகளும் தான் காரணம் என்பது தெரியுமா?

Things That Are Giving You Ugly Cellulite

இக்கட்டுரையில் ஒருவருக்கு தொடை, பிட்டம் போன்ற பகுதிகளில் அசிங்கமாக இருக்கும் செல்லுலைட் வருவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகளவு ஜங்க் உணவுகள்

அதிகளவு ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் டாக்ஸின்கள், சருமத்தில் அசிங்கமான செல்லுலைட்டை உருவாக்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

உடலில் பெண் ஹார்மோனான ஈட்ஸ்ரோஜென் அதிகளவு இருந்தாலும், செல்லுலைட் உருவாகும். அதிலும் உடலில் கொழுப்புச் செல்கள் அல்லது உடல் பருமன் அதிகம் உள்ளோருக்கு தான், ஈஸ்ட்ரோஜெனின் உற்பத்தி அதிகமாக இருப்பதாக பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வில் தெரிய வந்தது.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, அசிங்கமான செல்லுலைட்டை உருவாக்கும்.

போதிய நீர் அருந்தாமை

போதிய நீர் அருந்தாமை

தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆனால் ஒருவர் போதிய அளவு நீரை அருந்தாமல் இருந்தால், அது உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரித்து, சருமத்தில் செல்லுலைட்டை உண்டாக்கும்.

உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை

உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை

ஆம், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும் செல்லுலைட்டை உண்டாக்கும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது, உடலில் இரத்த ஓட்டம் குறைந்து, செல்லுலைட் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இறுக்கமான உடைகள்

இறுக்கமான உடைகள்

இறுக்கமான உடைகளை அணியும் போது, இரத்த ஓட்டம் தடைப்படுவதோடு, உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதும் தடுக்கப்பட்டு, செல்லுலைட்டை உருவாக்கும்.

அதிகளவு காஃப்பைன்

அதிகளவு காஃப்பைன்

ஒரு நாளில் ஒரு கப் காபி போதுமானது. ஆனால் அதற்கு அதிகளவு காபியை குடிக்கும் போது, அது செல்லுலைட் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Are Giving You Ugly Cellulite

Here are some things that are giving you ugly cellulite. Read on to know more...
Story first published: Wednesday, April 19, 2017, 14:37 [IST]
Desktop Bottom Promotion