குளிக்காமலேயே நல்லா பிரஷ்ஷா இருக்கணுமா? அப்ப இந்த ட்ரிக்ஸ்களை தெரிஞ்சுக்கோங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய அவசர உலகில் குளிக்க கூட பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. குளிக்காவிட்டால் பலரும் புத்துணர்ச்சியின்றி இருப்பார்கள். அதோடு, வியர்வை துர்நாற்றமே நாம் குளிக்கவில்லை என்பதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிவிடும். ஆனால் குளிக்காமலேயே நன்கு புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்க ஒருசில ட்ரிக்ஸ்கள் உள்ளன.

Proven Methods To Smell Good Even Without Taking A Shower

அந்த ட்ரிக்ஸ்களை மனதில் கொண்டு பின்பற்றினால், நிச்சயம் குளிக்காமலேயே குளித்து பிரஷ்ஷாக இருப்பது போல் காட்சியளிக்கலாம். சரி, இப்போது அந்த ட்ரிக்ஸ்கள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரிக்ஸ் #1

ட்ரிக்ஸ் #1

அக்குளில் அதிகமாக வியர்த்தால், ஹேண்ட் சானிடைசரை அக்குளில் பயன்படுத்துங்கள். இதனால் அக்குளில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வியர்வை நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

ட்ரிக்ஸ் #2

ட்ரிக்ஸ் #2

பலரும் குளித்த பின் தான் டியோடரண்ட் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இரவில் படுக்கும் முன்பே டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்தினால், மறுநாள் காலையில் எழும் போதே வியர்வை நாற்றமின்றி, நல்ல புத்துணர்ச்சியுடனும், நல்ல மணத்துடனும் இருக்கலாம்.

ட்ரிக்ஸ் #3

ட்ரிக்ஸ் #3

தலைக்கு குளிக்க நேரமில்லையா? ஆனால் தலை பிசுபிசுப்புடனும் துர்நாற்றத்துடனும் உள்ளதா? அப்படியெனில் பேபி பவுடரை சிறிது தலையில் தூவிவிடுங்கள். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, தலைமுடியும் நல்ல மணத்துடன் இருக்கும்.

ட்ரிக்ஸ் #4

ட்ரிக்ஸ் #4

குளிக்காமலேயே நம்மீது நல்ல மணம் வீச வேண்டுமானால், தலைமுடியின் முனைகளில் ஈரமான பேபி துடைப்பான்களைக் கொண்டு தேய்த்தால், நம்மைச் சுற்றி ஒரு நல்ல நறுமணம் வீசும்.

ட்ரிக்ஸ் #5

ட்ரிக்ஸ் #5

முழங்கை, மணிக்கட்டு, கழுத்து போன்ற இடங்களில் நல்ல நறுமணமிக்க பெர்ப்யூம்களை, ஆடைகளை அணியும் முன் பயன்படுத்துங்கள். மேலும் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்துங்கள். இதனால் நாள் முழுவதும் நல்ல மணத்துடன் இருக்க முடியும்.

ட்ரிக்ஸ் #6

ட்ரிக்ஸ் #6

எலுமிச்சை மணம் கொண்ட க்ரீம்கள் அல்லது லோசன்களைப் பயன்படுத்தினால், உடலில் வியர்வை துர்நாற்றமே வீசாது. மாறாக, நாள் முழுவதும் நல்ல நறுமணத்துடன் நாம் இருக்கலாம்.

ட்ரிக்ஸ் #7

ட்ரிக்ஸ் #7

முக்கியமாக குளிக்காமலேயே புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்க வேண்டுமானால், உடைகளை மாற்ற வேண்டும். குறிப்பாக உள்ளாடைகளை தவறாமல் மாற்ற வேண்டும். இந்த ஒரு செயலை செய்தாலே போதும், குளிக்காமலேயே நாம் புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Proven Methods To Smell Good Even Without Taking A Shower

Here are the simple tricks that help you remain fresh even if you dont have a shower..
Story first published: Wednesday, February 22, 2017, 11:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter