அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா? அப்ப இத தினமும் செய்யுங்க...

Posted By:
Subscribe to Boldsky

புருவங்கள் அடர்த்தியாக இருந்தால், அது ஒருவரின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். எனவே பலரும் அடர்த்தியான புருவங்களைப் பெற விரும்புகின்றனர். ஆனால் சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக இருக்காது. அத்தகையவர்கள் கண் மைகளைப் பயன்படுத்தி, புருவங்களை வரைந்து கொள்வார்கள்.

Natural Ways To Thicken Your Eyebrows At Home

புருவங்களின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி, நல்ல அடர்த்தியான புருவங்களைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள அலோனின் என்னும் பொருள் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவி, ஒவ்வொரு முடியையும் வலிமைப்படுத்தும். அதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய் புருவங்களின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். அதற்கு இரவில் படுக்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயைக் கொண்டு தினமும் புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

பால்

பால்

பாலில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், அத்தியாவசிய நொதிகள் உள்ளது. இது முடியின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவும். ஆகவே தினமும் பாலை புருவங்களின் மீது தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காய சாற்றில் உள்ள கனிமச்சத்துக்கள், வைட்டமின் பி, வைட்டமின் சி, சல்பர் போன்றவை முடியின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும். எனவே வெங்காய சாற்றினை அல்லது அதன் பேஸ்ட்டை புருவங்களின் மீது இரவில் படுக்கும் போது தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை புருவங்களின் மீது தினமும் தடவி வந்தாலும், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும். குறிப்பாக விளக்கெண்ணெயை புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் பயோடின் ஏராளமாக உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அத்தகைய மஞ்சள் கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, புருவங்களின் மீது தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதோடு, நல்ல மாய்ஸ்சுரைசராகவும் செயல்படும். அதற்கு தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் நன்கு ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில் முடி மெலிவதைத் தடுக்கும். அதற்கு 2 துளி டீ-ட்ரீ எண்ணெயுடன், 3 துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, புருவங்களின் மீது தடவி, நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். டீ-ட்ரீ எண்ணெய் அழற்சியை ஏற்படுத்தினால், இம்முறையைப் பின்பற்ற வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ways To Thicken Your Eyebrows At Home

Did you know that you can naturally get those thick eyebrows right at your home using some of the best home remedies and oils. Read to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter