அக்குள் வியர்வையால் துர்நாற்றமா? இதிலிருந்து விடுபட சூப்பரான டிப்ஸ்!

Written By:
Subscribe to Boldsky

மிகவும் வெயிலாக இருக்கும் போது, உடற்பயிற்சிகள் செய்யும் போது, இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் நமது உடலில் வியர்வை நாற்றம் அதிகமாக வீச தொடர்ங்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் வியர்வை கரையும் உங்களது ஆடைகளில் படிந்துவிடும். இந்த துர்நாற்றம் மிகவும் மோசமானதாக இருக்கும். இனி கவலை வேண்டாம். இந்த பகுதியில் உங்களது அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில குறிப்புகளை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. இயற்கை சோப்

1. இயற்கை சோப்

அக்குள் பகுதியில் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். எனவே இந்த பகுதியை ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். மற்றும் ஒரு சிறந்த தீர்வு என்னவென்றால், எப்போதும் உங்களது அக்குள் பகுதியை டிரையாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பாதாம், ஆட்டுப்பால் போன்றவற்றினால் தயாரிக்கப்பட்ட இயற்கை சோப்புகளை வாங்கியும் பயன்படுத்தலாம்.

2. வெந்தயகீரை

2. வெந்தயகீரை

வெந்தயக்கீரையின் இலைகள் உங்களுக்கு இயற்கையான வாசனை பொருளாக விளங்குகிறது. இதன் இரண்டு அடுக்கினை மட்டும் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவிய பின்னர், குளித்து முடித்த உடன் அக்குளில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து இதனை எடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் அக்குள் பகுதி ஈரமாகாமல் இருக்கும்.

3. வினிகர்

3. வினிகர்

அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீச காரணம், அங்குள்ள பாக்டீரியாக்கள் தான். இதற்கு வினிகர் பயன்படுகிறது. அதற்கு இரவு தூங்குவதற்கு முன்பாக சிறிதளவு வினிகரை பஞ்சில் நனைத்து அக்குள் பகுதியில் தடவிக்கொள்ள வேண்டும். பின்னர் காலையில் ஆன்டி-பாக்டீரியல் சோப் கொண்டு அக்குள் பகுதியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.

4. எலுமிச்சை

4. எலுமிச்சை

சிட்ரஸ் பழங்கள் அக்குள் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை போக்குவதன் மூலமாக தூர்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அக்குள் பகுதியில் இரவு நேரத்தில் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எரிச்சல் அதிகமாக இருந்தால், இதனை உடனடியாக கழுவி விட வேண்டும். இல்லை என்றால் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

5. உருளைக்கிழங்கு

5. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு துண்டுகள் உங்களது அக்குள்களில் வளரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. உருளைக்கிழங்கை அரை இஞ்ச் அடர்த்தி உள்ள துண்டாக வெட்டி, அக்குள் பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து இதனை நீக்கிவிட வேண்டும்.

6. பேக்கிங் சோடா

6. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, உடல் ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு உற்ற நண்பனாக இருக்கிறது. நீங்கள் குளித்து முடித்து வந்தவுடன் உடலை நன்றாக உலர்த்திவிட்டு, பவுடருக்கு பதிலாக பேக்கிங் சோடாவை சிறிதளவு அக்குள் பகுதியில் போட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு இதனை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Smelly Armpits

Home Remedies for Smelly Armpits
Story first published: Saturday, October 7, 2017, 13:50 [IST]