தினமும் இதனை முகத்தில் தேய்த்து கழுவினால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Posted By: Aashika
Subscribe to Boldsky

ரோஜாப்பூ வாசம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது வாசனைக்கு மட்டுமல்ல சரும பராமரிப்புக்கும்

ஏற்றது என்று சொன்னால் அது மிகையாகாது. ரோஸ் வாட்டரில் பல்வேறு ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள்

நிறைந்திருக்கின்றன அத்துடன், பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ரோஸ் வாட்டர் மூலமாக சருமப்

பராமரிப்பிற்க்கான சில டிப்ஸ் . அதனை முகத்தில் தினமும் தேய்த்து கழுவுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறண்ட சருமம் :

வறண்ட சருமம் :

ரோஸ்வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். சருமத்திற்க்கான சிறந்த டோனராகவும் இது செயல்படும்.

இதை முகத்திற்கு தடவி வந்தால் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்,

அரிப்பு :

அரிப்பு :

அலர்ஜியால் அரிப்பு ஏற்பட்டால் அந்த இடங்க்களில் ரோஸ்வாட்டர் தடவினால் உடனடி ரிசல்ட் தெரியும்.

ரோஸ்வாட்டரில் இருக்கும் சில நுண்ணுயிர்கள் அலர்ஜி, அரிப்பு, சிவத்தல் போன்றவற்றை குறைத்திடும்.

கரும்புள்ளி :

கரும்புள்ளி :

முகத்துவாரங்களை சுத்தப்படுத்த ரோஸ்வாட்டரை பயன்படுத்தலாம். முகத்தில் அதிக எண்ணை சுரப்பை

கட்டுப்படுத்தும் அத்துடன் கரும்புள்ளி வராமல் தடுத்திடும். பரு தழும்புகள் இருந்தால் இதைத் தொடர்ந்து தேய்த்து வர

நல்ல மாற்றம் உண்டாகும்.

பித்த வெடிப்பு :

பித்த வெடிப்பு :

ரோஸ்வாட்டருடன் க்ளிசரின் கலந்து கால் பாதத்தில் தடவி வர பாதத்தில் உள்ள பித்த வெடிப்புகள் குறைந்திடும்.

இதனை தினமும் கூட செய்யலாம். பாதம் மிருதுவாகும்.

லிப்ஸ் :

லிப்ஸ் :

வெடித்த உதடுகள் அல்லது நிறமாறிய உதடுகளாக இருந்தால் உதடுகளில் ரோஸ் வாட்டர் தடவி வந்தால் நல்ல பலன்

கிடைக்கும். உதடுகளில் உள்ல கருமை மறையும்.

மேக்கப் ரிமூவர் :

மேக்கப் ரிமூவர் :

ரோஸ் வாட்டர் சிறந்த மேக்கப் ரிமூவராகவும் செயல்படும். எந்த வகையான சருமம் கொண்டவர்களாக இருந்தாலும்

இதனை பயன்படுத்தலாம். இதனால் சருமம் பாதிப்படையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty make up beauty how to
English summary

Benifits Of Rose Water

Beauty tips Using Rose Water
Story first published: Tuesday, July 11, 2017, 16:15 [IST]