வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்... தீமைகளும்...

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களின் தினசரி செயல்பாடுகளில் ஒன்று தான் ஷேவிங். இதில் வெட் ஷேவிங், ட்ரை ஷேவிங் என இரு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ளது.

உங்களுக்கு இவற்றில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு ட்ரை ஷேவிங் மற்றும் வெட் ஷேவிங்க்கின் நன்மைகள் மற்றும் தீமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெட் ஷேவிங்

வெட் ஷேவிங்

வெட் ஷேவிங் முறையில் ரேசர், சோப்பு அல்லது க்ரீம்கள் பயன்படுத்தப்படும். இது தான் பழங்காலம் முதலாக ஆண்கள் பின்பற்றி வரும் முறை. இன்றும் பல ஆண்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகிறார்கள்.

நன்மைகள்

நன்மைகள்

வெட் ஷேவிங் செய்வதான் மூலம் தாடியை முழுமையாக நீக்கலாம். மேலும் இம்முறையின் மூலம் ஷேவிங் செய்வதால் கன்னங்கள் மென்மையாக இருக்கும்.

வெட் ஷேவிங் சிறந்தது ஏனெனில்...

வெட் ஷேவிங் சிறந்தது ஏனெனில்...

பெரும்பாலான ஆண்கள் இம்முறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், இம்முறையினால் ஷேவிங் செய்த பின் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும் என்பதால் தான். மேலும் வெட் ஷேவிங் முடியை மட்டும் நீக்குவதோடு, இறந்த செல்களையும் நீக்கி பொலிவோடு காட்டுகிறது.

தீமைகள்

தீமைகள்

வெட் ஷேவிங் மூலம் வெட்டுக் காயங்களை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, சோப்பு அல்லது க்ரீம்களைப் பயன்படுத்துவதால் அரிப்பு மற்றும் எரிச்சல்களை உண்டாக்கும். முக்கியமாக வெட் ஷேவிங் செய்ய நீண்ட நேரம் ஆகும்.

ட்ரை ஷேவிங்

ட்ரை ஷேவிங்

ட்ரை ஷேவிங் எலக்ட்ரிக் ஷேவர் மூலம் செய்யப்படுவதாகும். இம்முறைக்கு சோப்பு அல்லது க்ரீம் எதுவும் தேவை இல்லை. பெரும்பாலான இளம் தலைமுறை ஆண்கள் இதனையே பின்பற்றுகின்றனர்.

நன்மைகள்

நன்மைகள்

ட்ரை ஷேவிங் செய்வதால் எவ்வித காயங்களும் ஏற்படாது. மேலும் வெட் ஷேவிங்கை விட இதனை மிகவும் வேகமாக செய்துவிடலாம்.

தீமைகள்

தீமைகள்

எலக்ட்ரிக் ஷேவர் சற்று விலை அதிகமானது. அதுவும் நல்ல தரமான எலக்ட்ரிக் ஷேவர் குறைந்தது 2500 ரூபாய் இருக்கும். தரமற்றதை வாங்கிப் பயன்படுத்தினால் சருமம் மோசமானதாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wet Shaving VS Dry Shaving: Pros & Cons

Wet shaving or dry shaving, which one of these do you prefer guys? Here are some of the pros and cons of wet and dry electric shaving, take a look.
Story first published: Saturday, February 27, 2016, 13:48 [IST]
Subscribe Newsletter