பளிச்சென பற்கள் வெள்ளையாக, இதோ ஒரு இன்ஸ்டென்ட் தீர்வு!

Written By: Hemalatha
Subscribe to Boldsky

நாம் பேசி விட்டு சென்றபின்னும் நம் புன்னகை மற்றவர்கள் மனதில் நீங்காமல் இருந்தால் அதுவே ஒரு வகையில் அங்கீகாரம்தானே. அந்த அழகான சிரிப்பிற்கு பற்கள்தானே உத்தரவாதம் அளிக்கும்.

பற்களை சீராக பராமரிக வேண்டும்.அதேபோல் பற்களில் ஏற்படும் கறைகளையும் நாம் தினமும் கவனித்து போக்க வேண்டும். அழகுக்கு அழகு கூட்டும் இந்த குறிப்பைனையும் உங்கள் மனதில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. கடைபிடிக்கவும் செய்யுங்கள்.

Instant remedies for teeth whitening

பல் தேய்ப்பதனால் வாயிலுள்ள கிருமிகள் நீங்கும். ஆனால் நாம் சாப்பிடும் கலர்ஃபுல் உணவு வகைகள், காபி, தேநீர் ஆகியவைகள் விடாபடியாக நம் பற்களில் தங்கும். அவற்றைப் போக்க என்னதான் பல் தேய்த்தாலும் போகாது. இதற்கு சின்ன சின்ன உத்திகளை கடைப்பிடித்தால் பற்களை பளிச்சிட வைக்கலாம்.

சமையல சோடா :

பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க இன்ஸ்டென்டாய் இந்த சமையல் சோடா பயன் தரும். நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பேஸ்ட்டில் சிறித்து சமையல் சோடாவையும் அதன் மேல் தூவி, பல் விளக்கலாம். இதனால் பற்களில் உடனடி வெண்மை கிடைக்கும்.

Instant remedies for teeth whitening

உப்பு :

சமையல் சோடா இல்லையென்றாலும் உப்பினை பயன்படுத்தலாம். பல் விளக்கியதும் பற்களில் உப்பினைக் கொண்டு மெதுவாக தேய்த்தால், மஞ்சள் கறை போய் விடும். பல் வலி இருந்தாலும் இது தீர்வு தருகிறது.

Instant remedies for teeth whitening

எலுமிச்சை சாறு :

விடாப்படியாக மஞ்சள் மஞ்சளெனென்று உங்கள் பற்கள் இருந்தால் எலுமிச்சை சாறு பெஸ்ட் சாய்ஸ். எலுமிச்சை சாறு எடுத்து அதனுடல் சிறிது உப்பு கலந்து பற்களில் மசாஜ் செய்தால் ,பற்கள் வெண்மையாகிவிடும்.

ஆனால் இது தினமும் செய்தால் பல் கூச்சம் வந்துவிடும். ஆகவே இதை இன்ஸ்டென்டாக மட்டுமே பயன்படுத்துங்கள்.

Instant remedies for teeth whitening

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் லௌரிக் அமிலம் இருப்பதால் அது பற்களில் ஏற்படும் கிருமிகளை அழித்து, மஞ்சள் நிறத்தினை போக்கும்.

தினமும் பல் விளக்கிய பின் சுத்தமான ஒரு சிறிய பஞ்சினை தேங்காய் எண்ணெயில் நனைத்து , பற்களில் துடைத்தால், பற்கள் பளிச்சிடும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Instant remedies for teeth whitening

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் சரும மற்றும் அழகு பராமரிப்பில் நிறைய உபயோகப்படுத்துகிறோம். இது பற்களின் பராமரிப்பிலும் நன்மைகளைத் தரும் என்பது தெரியுமா? . ஆப்பிள் சைடர் வினிகரை 2 ஸ்பூன் எடுத்து அரை கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து எல்லா பற்களின் இடுக்களிலும் போகும்படி, கொப்பளித்தால், பளிச் பற்களை பெறலாம்.

Instant remedies for teeth whitening

ஸ்ட்ரா பெர்ரி:

ஸ்ட்ரா பெர்ரி பழத்தில் மாலிக் அமிலம் உள்ளது. இது இயற்கையான ப்ளீச் ஆகும். இதன் சதை பகுதியை எடுத்து பற்களில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கறை போய் வெள்ளையான பற்கள் கிடைக்கும்.

Instant remedies for teeth whitening

வாழைப்பழம் :

பற்களை வெள்ளையாக்க இது மிக எளிய வழியாகும். வாழைப்பழத்தின் தோலிலுள்ள நாரினை எடுத்து பற்களில் தேய்த்து 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரினில் கழுவினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை போய் விடும்.

Instant remedies for teeth whitening

நல்ல மனம் குழ்ந்தையின் சிரிப்பைப் போன்றது. அந்த சிரிப்பின் அழகு பற்களில் இருக்கிறது. அந்த பற்களை பராமரிப்பது உங்கள் கையில் இருக்கிறது.

English summary

Instant remedies for teeth whitening

Instant remedies for teeth whitening
Subscribe Newsletter