Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
ஒருவருக்கு வாய் பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் மிகவும் வேகமாக வரக்கூடும். மேலும் வாய் பிரச்சனை ஒருவரின் அழகையும் கெடுக்கும்.
அப்படி வாயில் இருக்கும் இன்று வரை பலரும் சாதாரணமாக நினைத்து விட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான் பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள். இந்த மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக உள்ளனர். ஆனால் இது அப்படியே நீடித்தால், அதனால் பற்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆயில் புல்லிங்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். அடுத்து பிரஷ் கொண்டு எப்போதும் போன்று பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்து வந்தால் பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஈறு பிரச்சனைகளும் அகலும்.

கொய்யா இலை
கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

கிராம்பு
கிராம்பை பொடி செய்து, ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பற்களில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் இருமுறை செய்து வந்தால், கிராம்பில் உள்ள உட்பொருட்கள் பற்காறை மற்றும் மஞ்சள் கறைகளை நீக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.

ஆரஞ்சு தோல்
இரவில் படுக்கும் முன் ஆரஞ்சு தோலின் உட்பகுதியை நேரடியாக பற்களில் தேய்ய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வாயைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அழகிய முத்துப் போன்ற பற்களைப் பெறலாம்.

வெள்ளை வினிகர்
2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமும் பற்களின் பின் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கலாம்.

ரோஸ்மேரி எண்ணெய்
2-3 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, அந்நீரை வாயில் ஊற்றி 10 நிமிடம் கழித்து, துப்ப வேண்டும். பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் இருமுறை செய்து வந்தால் வாய் புத்துணர்ச்சியுடனும், கறைகளின்றியும் இருக்கும்.

ஆப்பிள்
பற்களில் கறைகள் ஏதும் படியாமல் இருக்க வேண்டுமானால், உணவை உட்கொண்ட பின் ஒரு துண்டு ஆப்பிளை உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
