பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

Posted By:
Subscribe to Boldsky

காலையில் எழுந்ததும் டூத் பிரஷை எடுத்து, பேஸ்ட் வைத்து பற்களைத் துலக்கிவிட்டு தான், இதர செயல்களில் ஈடுபடுவோம். ஆனால் தினமும் நாம் சரியாகத் தன் பற்களைத் துலக்கிறோம் என்பது தெரியுமா? பலரும் நான் தினமும் பலமுறை பற்களைத் துலக்குவேன், அதனால் என் பற்கள் ஆரோக்கியமாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அது தவறு. ஒவ்வொரு நாளும் பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் சில தவறுகளை செய்து வருகிறோம். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அந்த தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து திருத்தி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல மாதமாக ஒரே பிரஷை பயன்படுத்துவது

பல மாதமாக ஒரே பிரஷை பயன்படுத்துவது

ஒரு டூத் பிரஷை ஒருவர் 2 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அவர் தனது பற்களுக்கு தீங்கிழைத்துக் கெண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஏனெனில் 2 மாதங்களுக்கு மேல் பிரஷின் முட்கள் உதிர ஆரம்பித்து, பற்களை முறையாக சுத்தம் செய்யாது. எனவே 2 மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் உங்கள் டூத் பிரஷை மாற்றுங்கள்.

போதிய நேரம் பற்களை துலக்குவதில்லை

போதிய நேரம் பற்களை துலக்குவதில்லை

ஆம், தற்போது நிறைய பேர் பற்களை மிகவும் வேகமாக 1 நிமிடம் கூட செலவழிக்காமல் துலக்குகிறார்கள். ஒருவர் பற்களைத் துலக்குவதற்கு குறைந்தது 2 நிமிடம் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதற்கு குறைவாக பற்களைத் துலக்கினால், அதற்கு நீங்கள் பற்களைத் துலக்காமலேயே இருக்கலாம்.

உடனே நீரால் வாயைக் கொப்பளிப்பது

உடனே நீரால் வாயைக் கொப்பளிப்பது

இது அனைவரும் செய்யும் ஓர் செயல் தான். பற்களைத் துலக்கிய பின் உடனே நீரால் வாயை பலமுறைக் கொப்பளித்து கழுவுவோம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் பற்களின் மேல் வேலை செய்ய வேண்டுமானால், பற்களைத் துலக்கியப் பின் குறைந்தது 20 நிமிடமாவது நீரால் வாயைக் கொப்பளிக்காமல் இருக்க வேண்டும். இதனால் டூத் பேஸ்ட் பற்களின் மேல் முறையாக வேலை செய்யும்.

பாத்ரூமிலேயே டூத் பிரஷை வைப்பது

பாத்ரூமிலேயே டூத் பிரஷை வைப்பது

இது பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு. பாத்ரூமிலேயே டூத் பிரஷை வைப்பதால், கிருமிகளின் பெருக்கம் டூத் பிரஷில் அதிகரித்து, பின் கிருமிகள் நிறைந்த பிரஷால் பற்களை மீண்டும் துலக்குவோம். இது அப்படியே நீடித்தால் பற்களின் ஆரோக்கியம் தான் பாழாகும். எனவே எப்போதும் பற்களைத் துலக்கியப் பின் டூத் பிரஷை பாத்ரூமினுள் வைக்காமல் வெளியே காற்றோட்டமான இடத்தில் வையுங்கள்.

நாக்கை சுத்தம் செய்யாமல் இருப்பது

நாக்கை சுத்தம் செய்யாமல் இருப்பது

பற்களைத் துலக்கும் போது தவறாமல் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் நிறைய பேர் சோம்பேறித்தனத்தால் அதைச் செய்வதில்லை. இப்படி நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், கிருமிகளின் தேக்கம் வாயில் அதிகரித்து, அதுவே வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

கடுமையான முட்களைக் கொண்ட பிரஷ்

கடுமையான முட்களைக் கொண்ட பிரஷ்

கடுமையான முட்களைக் கொண்ட டூத் பிரஷ் ஈறுகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கும். நிபுணர்களும், இம்மாதிரியான பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.

முன்னும் பின்னும் பற்களைத் துலக்குவது

முன்னும் பின்னும் பற்களைத் துலக்குவது

நிறைய பேர் பற்களை முன்னும் பின்னும் தான் தேய்ப்பார்கள். ஆனால் இப்படி முன்னும் பின்னும் தேய்த்தால் எவ்வித பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் பற்களைத் துலக்கும் போது வட்ட சுழற்சியில் தேயுங்கள். இதனால் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.

ஒவ்வொரு உணவிற்கு பின்னும் பற்களைத் துலக்குவது

ஒவ்வொரு உணவிற்கு பின்னும் பற்களைத் துலக்குவது

சிலர் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன் என்று, ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் பற்களைத் துலக்குவார்கள். ஆனால் உண்மையில் இப்படி பற்களைத் துலக்குவது நல்லதல்ல. ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களைத் துலக்கினாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Mistakes You Often Make While Brushing Your Teeth

Here are some mistakes you often make while brushing your teeth. Read on to know more...
Story first published: Thursday, July 14, 2016, 12:33 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter