Latest Updates
-
பாஸ்போர்ட் இல்லாமல் உலகின் எந்த நாட்டுக்கும் பயணிக்கும் அந்தஸ்து உள்ள சக்திவாய்ந்த 3 பேர் யார் தெரியுமா? -
2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
3/4 கப் உளுந்து இருந்தா இந்ததால் மகாராணியை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!
அழகாக இருக்க இணையதளத்தில் தேடும் போது, பல செய்திகளில் க்ரீன் டீ குடிக்குமாறு பரிந்துரைப்பதைப் படித்திருப்பீர்கள். அது உண்மையே. ஆய்வு ஒன்றிலும், க்ரீன் டீ குடிப்பதால், உடலினுள் மட்டுமின்றி, உடலின் வெளிப்புறமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கும் க்ரீன் டீ குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி மட்டும் தான் தெரியும். அதன் அழகு நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ப்ளாக் டீயின் சில வியப்பூட்டும் நன்மைகள்!!!
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அன்றாடம் க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் அழகு நன்மைகளை பட்டியலிட்டுள்ளது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளதால், இதனை குடிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்படும் மற்றும் புதிய செல்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் நாளுக்கு நாள் அழகும் அதிகரிக்கும். சரி, இப்போது தினமும் க்ரீன் டீயைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!
மக்களே... ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!

எடை குறைவு
வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அதற்கு க்ரீன் டீ குடிப்பது தான் சிறந்த வழி. க்ரீன் டீ குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அத்துடன் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவில் கரைந்துவிடும். இதன் மூலம் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால், தானாக அழகாக காணலாம்.

சுருக்கங்கள்
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால் சூரியனின் புறஊதாக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

பருக்கள்
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், பருக்களை தூண்டும் ஹார்மோன்களை குறைத்து, பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

ஆரோக்கியமான கூந்தல்
க்ரீன் டீயின் நன்மைகளை குடிப்பதன் மூலம் மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை. அதனைக் கொண்டு கூந்தலை அலசுவதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மயிர்கால்களை வலிமையடையச் செய்து, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

வயதாவதைத் தடுக்கும்
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உங்களின் இளமையைப் பாதுகாக்கும். ஆகவே நீங்கள் உங்களின் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடியுங்கள்.

பொலிவான சருமம்
க்ரீன் டீ குடிப்பதன் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதால், சருமம் பொலிவோடு காணப்படும். மேலும் ஆய்வுகள் பலவும் க்ரீன் டீ குடித்து வந்தால், நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம் என்று சொல்கிறது.

எத்தனை கப் க்ரீன் டீ நல்லது?
க்ரீன் குடித்தால் அழகு அதிகரிக்கும் என்று அளவுக்கு அதிகமாக குடித்தால், மோசமான விளைவை தான் சந்திக்க நேரிடும். ஆகவே அளவாக, அதாவது 2-3 கப் க்ரீன் குடித்து, அதன் முழு பயனையும் பெறுங்கள். மேலும் UMMC-யும் ஒருநாளைக்கு 2-3 கப் க்ரீன் டீ குடிப்பதையே பரிந்துரைக்கிறது.



Click it and Unblock the Notifications
