நடிகை தமன்னாவின் அழகு ரகசியம் என்னவென்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்திய திரையுலகில் பால் போன்ற நிறம் கொண்டவர் தான் நடிகை தமன்னா. மேலும் இவர் தமிழில் முதன்மையாக நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த சரித்திர படமான 'பாகுபலி'யில் அணிந்து வந்த வெள்ளை நிற உடையில், தேவதை போன்று காணப்பட்டார். இதற்கு அவரது நிறம் தான் காரணம் எனலாம்.

நடிகை ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

இவரைப் பார்க்கும் போது, பலருக்கும் இவரது அழகு ரகசியம் என்னவாக இருக்கும், ஒருவேளை ஃபேர்னஸ் க்ரீம்மை அதிகமாக பயன்படுத்துவாரோ என்றெல்லாம் தோன்றும். ஆனால், உண்மையில் இவர் தன் முகத்திற்கு எந்த ஒரு ஃபேனஸ் க்ரீமையும் பயன்படுத்தியதில்லை மற்றும் தனது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க தவறாமல் அன்றாடம் ஒருசிலவற்றை செய்வேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, இவர் சிக்கென்ற உடலமைப்பைப் பெற்றிருப்பதால், இவருக்கு அனைத்து வகையான உடைகளும் பொருத்தமாக உள்ளது.

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

சரி, உங்களுக்கு இவரது அழகு மற்றம் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தனது அழகு ரகசியம் குறித்து நடிகை தமன்னா அளித்த பேட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெஜிடேரியன் டயட்

வெஜிடேரியன் டயட்

நடிகை தமன்னா வெஜிடேரியன் உணவுகளைத் தான் அதிகம் உட்கொள்வாராம். அசைவ உணவுகளை சாப்பிடமாட்டாராம்.

தயிர்

தயிர்

தமன்னாவிற்கு தயிர் ரொம்ப பிடிக்குமாம். எனவே தினமும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வாராம்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

தமன்னாவிற்கு வறுத்த உணவுகள் பிடிக்குமாம். ஆனால் உடலை கட்டுக்கோப்புடன் அழகாக பராமரிப்பதற்காக வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளமாட்டாராம்.

நீர்ம உணவுகள்

நீர்ம உணவுகள்

சருமம் பொலிவோடு காணப்பட தினமும் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு, சூப், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் குடிப்பாராம்.

பாதாம் மற்றும் தேன்

பாதாம் மற்றும் தேன்

தினமும் காலையில் எழுந்தவுடன் நீரில் ஊற வைத்த பாதாமை ஒரு கையளவு சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பாராம்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

தமன்னா சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பாராம்.

மேக்கப்

மேக்கப்

தமன்னா சூட்டிங் இல்லாத நேரத்தில் மேக்கப் போடுவதைத் தவிர்ப்பாராம். மேக்கப் சாதனங்களில் கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், மேக்கப் போடுவதை விரும்பமாட்டாராம்.

ஜிம்

ஜிம்

தமன்னா தினமும் தவறாமல் ஜிம் சென்று, கார்டியோ, வெயிட், ப்ரீ ஹேண்ட் உடற்பயிற்சி, அப்-க்ரஞ்சஸ் போன்றவற்றை மேற்கொள்வாராம். குறைந்தது ஒரு நாளைக்கு 1 மணிநேரமாவது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வாராம்.

யோகா

யோகா

தமன்னாவின் அழகு ரகசியத்தின் பின்னணியில் யோகாவும் உள்ளதாம். தினமும் தவறாமல் யோகா செய்வாராம். சொல்லப்போனால் இவரது அழகு மற்றும் உடலமைப்பிற்கு யோகாவும் ஓர் காரணம் என்றும் கூறியுள்ளார்.

ஃபேஸ் பேக்

ஃபேஸ் பேக்

தமன்னா கடலை மாவு, வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக்கைத் தான் போடுவாராம்.

சீகைக்காய்

சீகைக்காய்

தமன்னா எப்போதுமே தனது கூந்தலுக்கு ஷாம்பு போட்டதில்லையாம். வீட்டிலேயே சீகைக்காய், பப்பாளி மற்றும் நெல்லிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் வாஷ்ஷைக் கொண்டு தான் தனது கூந்தலை அலசுவாராம். அதுமட்டுமின்றி, சூட்டில் காலத்தில் தினமும் தலைக்கு இந்த ஷேர் வாஷைத் தான் பயன்படுத்துவாராம்.

படுக்கைக்கு முன்

படுக்கைக்கு முன்

தமன்னா தினமும் இரவில் படுக்கும் முன் மேக்கப்பை நீக்கிவிட்டு தான் தூங்குவாராம். மேலும் ஹெர்பல் ஸ்கரப் பயன்படுத்தி தினமும் முகத்தை கழுவுவாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamanna’s Beauty Secrets Revealed

At last the milky beauty Tamanna Bhatia has revealed her beauty secrets. Take a look...
Subscribe Newsletter