பற்களில் உள்ள கறைகளை நீக்கி வெள்ளையாக்க சில ட்ரிக்ஸ்...!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவீர்களா? இல்லையெனில், இன்றிலிருந்து பின்பற்ற ஆரம்பியுங்கள். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். தற்போது பற்களைத் துலக்க ஏராளமான டூத்பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன. இவற்றில் எதை வாங்குவது சிறந்தது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்போம்.

ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்!

பெரும்பாலான டூத்பேஸ்ட்டுகளில் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் புளூரைடு மற்றும் டைட்டானியம்-டை-ஆக்ஸைடு போன்றவை இருக்கும். எனவே டூத்பேஸ்ட் வாங்கும் போது இவை உள்ளதாக என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். என்ன தான் பார்த்து வாங்கினாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்குவது போன்று வராது. அதிலும் காலங்காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்கள் வெண்மையாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!!

வேப்பங்குச்சியைப் போன்று வேறு ஏதேனும் உள்ளதா என்று கேட்கலாம். நிச்சயம் உள்ளது. இங்கு அந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து அவற்றைக் கொண்டு உங்கள் பற்களை பராமரித்து பயன் பெறுங்கள்.

பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா

புதினா

வாயை கொப்பளித்ததும், புதினா பேஸ்ட்டை பற்களில் தடவி 2 நிமிடம் பிரஷ் செய்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்கவும், பின் மீண்டும் சிறிது புதினா பேஸ்ட்டை விரலில் எடுத்து, பற்களில் தேய்ப்பதோடு, 3 நிமிடம் ஈறுகளை மசாஜ் செய்து, வாயை நீரில் கொப்பளிக்கவும். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சுத்தமான மற்றும் கெட்டியான தேங்காய் எண்ணெயை பற்களில் தடவி பிரஷ் செய்து, 2 நிமிடம் கழித்து, உப்பு கலந்த நீரில் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி செய்வதன் மூலம், பற்களில் உள்ள கறைகள் நீங்குவதோடு, பற்களில் உள்ள சொத்தையும் நீங்கும்.

வேப்பிலை பொடி

வேப்பிலை பொடி

1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடியில், சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களில் தடவி பிரஷ் செய்து வர, வாய் துர்நாற்றம், பல் வலி போன்றவை நீங்கும். குறிப்பாக இந்த முறையை கைவிரலால் பிரஷ் செய்வது நல்லது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடில், பேக்கிங் சோடா மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து, மாதம் ஒருமுறை பற்களைத் துலக்கி வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் வேகமாக அகலும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, மாதத்திற்கு 2 முறை பற்களைத் துலக்கி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கல் உப்பு

கல் உப்பு

கல் உப்பு பல வாய் பிரச்சனைகளைச் சரிசெய்யும். அதற்கு கல் உப்பை தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து, பற்களை தடவி பிரஷ் செய்து வர, பற்கள் வெண்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Toothpaste To Clean Your Teeth

If you want to opt for natural ingredients to clean your teeth, here are some of the homemade toothpaste options to get a sparkling set of teeth.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter