வால்நட்ஸை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

உணவில்லாமல் நம்மால் வாழ முடியாது. உண்மை தான். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அனைத்து உணவையும் உண்ண முடியாதல்லவா? நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆரோக்கியத்தை அளித்திடும் உணவுகளை மட்டுமே நாம் உண்ண வேண்டும். அப்படி பல வித உடல்நல பயன்களை கொண்ட உணவு வகைகள் தான் ட்ரை ஃபுரூட்ஸ் எனப்படும் நட்ஸ். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வால்நட்ஸ். இதனால் உடலுக்கு மட்டுமல்லாது வெளிப்புற அழகிற்கும் பல நன்மைகள் கிடைக்கிறது.

வால்நட்ஸை அதன் கூட்டில் இருந்து எடுத்தால் சின்ன அளவிலான மூளை போன்று தான் இருக்கும். இது தற்செயலாக இருந்தாலும் கூட, இந்த ட்ரை ஃபுரூட் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பல வித பயன்களை கொண்டுள்ள இந்த நட்ஸால் உங்கள் அழகும், ஆரோக்கியமும் மேம்படும். சரி வால்நட்ஸினால் கிடைக்கும் பயன்களைப் பற்றி சற்று அதிகமாக தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா?

வால்நட்ஸை உங்கள் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் உடல்நல மற்றும் அழகு பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயதாகும் அறிகுறிகள் எளிதில் தெரியாது

வயதாகும் அறிகுறிகள் எளிதில் தெரியாது

வால்நட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால் சரும மீளுருவாக்கத்திற்கும் நெகிழ்ச்சிக்கும் உதவிடும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலாஜென் உற்பத்தியை மேம்படுத்தி அணுக்களை சீர்படுத்தும். இதனால் சருமம் தொனியிடல் பெற்று வயதாகும் அறிகுறிகள் எளிதில் தெரிய வராது. மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் அல்லது வயதாகும் அறிகுறிகள் என எதுவாக இருந்தாலும் சரி, வால்நட்ஸ் சாப்பிடுவதன் மூலமாக அல்லது முகத்தில் தினமும் வால்நட்ஸ் எண்ணெய்யை தேய்ப்பதன் மூலமாக இனி அவைகளுக்கு டாட்டா காட்டலாம்.

தெளிவான மற்றும் பிரகாசமான சருமம்

தெளிவான மற்றும் பிரகாசமான சருமம்

வால்நட்ஸ்களில் ரசாயன குணங்கள் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் ஒவ்வொரு அணுக்களுக்கும் ஆக்சிஜனும் ஊட்டச்சத்துக்களும் சென்றடையும். இந்த இரத்த ஓட்டம் நல்ல ஆரோக்கியத்துடன், சருமத்தை பிரகாசமடைய செய்யும். ஒரு நாளைக்கு 3-4 வால்நட்ஸ்களை நொறுக்குத்தீனியாக உட்கொண்டால் போதும், இழந்த பொழிவை உங்கள் சருமம் மீண்டும் பெறும்.

சரும தொற்றுக்களுக்கு வால்நட்ஸ் எண்ணெய்

சரும தொற்றுக்களுக்கு வால்நட்ஸ் எண்ணெய்

உங்கள் சருமத்தை அழகாக்கவும் பளபளக்க வைக்கவும் இந்த ட்ரை ஃபுரூட் பெரிதும் உதவுகிறது என்பதை பார்த்தோம். இதுப்போக சரும தொற்றுக்களை குணப்படுத்தும் குணங்களை இதன் எண்ணெய் கொண்டுள்ளது. அதன் பூஞ்சை எதிர்ப்பி மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்களுக்காக அறியப்படுகிறது வால்நட்ஸ் எண்ணெய். அத்தலெட்ஸ் ஃபுட், உரி தோல் அழற்சி மற்றும் கேண்டிடா போன்ற கடுமையான சரும அழற்சியை குணப்படுத்தும் வால்நட்ஸ் எண்ணெய். சொல்லப்போனால், வால்நட்ஸ் எண்ணெய்யை பூண்டு போன்ற இதர இயற்கை பூஞ்சை எதிர்ப்பி பொருட்களோடு சேர்த்தால், வேகமாக குணமாகும்.

சரும அமைப்பு முறை

சரும அமைப்பு முறை

வயதாவதை எதிர்த்து போராடுவது மற்றும் சருமத்திற்கு பொழிவை அளிப்பது போக, உங்கள் சருமத்தின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் வால்நட்ஸ் மேம்படுத்துகிறது. வால்நட்ஸில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளது. சூரிய பாதிப்பில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இது. இதுப்போக, வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்புகள் வளமையாக உள்ளது. இது சரும அணுக்களை வலுவாக்கவும், சருமத்தில் ஈரப்பதத்தை பூட்டி வைக்கவும், நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. மேலும் இந்த நட்ஸில் உள்ள புரதம் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும். அதனோடு உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு ஆதரவளிக்கும். அதனால் உங்கள் உணவில் கொஞ்சம் நட்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அழகிய மற்றும் உறுதியான கூந்தல்

அழகிய மற்றும் உறுதியான கூந்தல்

பல்வேறு கூந்தல் பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக வால்நட்ஸ் எண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளது. கூந்தலை கருமையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் தன்மை இந்த ட்ரை ஃபுரூட்டுக்கு உள்ளது. இதில் பையோடின் என்ற அதிமுக்கிய ஊட்டச்சத்து உள்ளது. இது உங்கள் கூந்தலை உறுதியாகவும் அடர்த்தியாகவும் ஆக்கும். வால்நட்ஸில் நல்ல புரதமும் இருப்பதால், கூந்தலின் வேர்களையும் திடப்படுத்தும். வால்நட்ஸ் எண்ணெய்யை சீரான முறையில் பயன்படுத்தினால் அல்லது வால்நட்ஸை சீராக உட்கொண்டு வந்தால், உங்கள் கூந்தல் அழகாகவும் உறுதியாகவும் மாறும்.

டென்ஷன் இல்லாத உறக்கம்

டென்ஷன் இல்லாத உறக்கம்

உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் கூட வால்நட்ஸ் உதவுகிறது. வால்நட்ஸில் வைட்டமின் பி மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ளதால், அவை உங்கள் மனநிலையை சமநிலைப்படுத்தி மன அழுத்தத்திற்கு எதிராக போராடும். மேலும் சோர்வு, பதற்றம் மற்றும் தூக்கமின்மையை போக்கவும் அது உதவும். அதனால் தெந்தன் அல்லாத நல்ல தூக்கம் வேண்டுமானால், உங்கள் உணவில் வால்நட்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு காரணம், போதிய தூக்கம் கிடைக்கவில்லை என்றால், வீங்கிய கண்கள், சுருக்கங்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் நல்லது

கர்ப்ப காலத்தில் நல்லது

வால்நட்ஸில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குரூப்ஸ் உள்ளது. இது கர்ப்பமாக இருக்கும் தாயின் உடலுக்குள் ஃபோலேட், ரிப்போஃப்ளேவின், தையமின் போன்ற பல பொருட்களை சேர்க்க உதவும். வால்நட்ஸ்களில் மெக்னீசியம், புரதம், ஆரோக்கியமான நார்ச்சத்துகள் மற்றும் கொழுப்பமிலங்கள் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் உள்ள சிசுக்களுக்கும் நல்லதாகும். தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கியத்தை அளிப்பதோடு மட்டுமல்லாது, தாயின் சருமத்தை பளபளக்கச் செய்யும் வால்நட் எண்ணெய்.

உடல் எடையை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்க உதவும்

இது தான் மிகவும் சிறந்த பயனாக பார்க்கபடுகிறது. சருமத்தின் அமைமுறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுவதோடு, உடல் எடையை குறைக்கவும் வால்நட்ஸ் உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள், டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் அதிகமாக உள்ளதால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு தேங்குவது குறையும். இது போக, சீரான முறையில் நட்ஸ் உட்கொள்ளாதவர்களை விட உட்கொண்டவர்களின் உடல் எடை 31% வேகமாக குறையும் என ஸ்பெயினில் உள்ள நவரா பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் மிதமான அளவில் உட்கொள்வது நல்லது.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அழகுடன் சேர்த்து மூளையையும் மேம்படுத்த இதை விட சிறந்த உணவு வேறு எதுவாகவும் இருக்க முடியாது. பார்ப்பதற்கு அச்சு அசலாக மூளையை போலவே இருப்பது வெறும் தற்செயலான ஒன்றாக இருக்க முடியாது. ஆம், மூளையின் வளர்ச்சிக்கு வால்நட்ஸ் பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு கை அளவில் வால்நட்ஸை உட்கொண்டால், மூளையின் சக்தி, அறிவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த நரம்பியல் அமைப்பும் மேம்படும். வால்நட்டில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் உங்கள் உடலில் ஆக்சிஜன் மற்றும் இரத்த சுற்றோட்டத்திற்கு உதவும். இதனால் மூளையின் செயல்பாடு சீராக நடக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

வால்நட்ஸில் நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. இவ்வளவு நல்லது ஒன்று சேர்ந்துள்ளதால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த ட்ரை ஃபுரூட்டாக இது விளங்கும். இதய நோய் மற்றும் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய் இடர்பாட்டை குறைப்பதில் இருந்து செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவது வரை இந்த நட்ஸ் அனைத்தையும் செய்கிறது. அனைத்து வித சரும மாசுக்களை வேகமாகவும், சிறப்பாகவும் உங்கள் உடலில் இருந்து நீக்கவும் வால்நட்ஸ் உதவுகிறது. கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது.

அதனால் அழகுடன் சேர்த்து ஆரோக்கியமான மூளையும் வேண்டுமானால், தினசரி உணவில் கொஞ்சம் வால்நட்ஸை சேர்த்துக் கொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ways Walnuts Make You Gorgeous

Read on to know more about the benefits of adding walnuts in your diet and beauty regime. Walnut is packed with many benefits which can help to improve your beauty and health.