நடிகை வித்யா பாலனின் அழகு ரகசியங்கள்!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

தென்னிந்திய அழகியான வித்யா பாலன் ஒரு பல்துறைத் திறமை வாய்ந்த நடிகையாகும். அதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. தன்னுடைய 27 வயதில் தன் நடிப்புலக பயணத்தை தொடங்கிய இவர், இன்று பாலிவுட்டின் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். அப்படி இப்படி என இருந்தாலும் கூட தான் செல்லும் இடமெல்லாம் தன் மீது ஈர்ப்புகள் விழும் படி செய்து விடுகிறார்.

எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? அவருடைய அழகிய சருமமும், மனதை கவரும் மென்மையான கூந்தலும் காரணமாக திகழ்கிறது. அவருக்கு அழகே அவரின் கண்கள் தான். அதையும் எப்படி நாம் மறந்து விட முடியும்? அவரது அழகை பத்து மடங்கு அதிகரிக்க செய்வதே அவரின் கண்கள் தான்.

வேலை பளு, தூக்கமின்மை, உடல் வறட்சி ஆகியவைகளுக்கு நடுவே தன் அழகை பராமரிக்க அவர் தவறுவதில்லை. இவரின் வேலைச்சுமையை ஒரு நாளும் தன் தோற்றத்தின் மீது அவர் பிரதிபலித்ததில்லை. வித்யா பாலனின் சில அழகு ரகசியங்களைப் படித்து அதை நீங்களும் முயற்சி செய்யலாமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தை சுத்தப்படுத்துதல்

சருமத்தை சுத்தப்படுத்துதல்

ரசாயனம் கலந்துள்ள அழகு சாதனங்களை தன் முகம் மற்றும் சருமத்தில் இருந்து சுத்தமாக துடைத்து எடுக்க அவர் தவறுவதில்லை. தன் சருமத்தில் இருந்து மேக்-அப்பை துடைத்து எடுக்க அவர் MAC மேக்-அப் துடைப்பான்களை பயன்படுத்துகிறார்.

கண்கள்

கண்கள்

வித்யா பாலனின் கண்கள் தான் முதலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும். அதற்கு அவர் பயன்படுத்துவது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் மை. உங்களால் இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நம் நாட்டிலேயே எது சிறந்தது என்பதை கண்டுப்பிடித்து அதை பயன்படுத்துங்கள்.

உணவு

உணவு

அவருடைய உணவில் எப்போதும் ஆர்கானிக் வகைகளே நிறைந்திருக்கும். அதுவும் முக்கியமாக பச்சை காய்கறிகளும், நற்பதமான பழங்களும். நற்பதமான பழச்சாறுகள் மற்றும் இளநீர் குடித்து எப்போதும் நீர்ச்சத்துடன் இருப்பார். இதனால் தான் மின்னிடும் சருமத்தோடு எப்போதும் ஜொலிக்கிறார். நாமும் அதை கண்டு தானே மயங்குகிறோம்.

சோப்பு

சோப்பு

ரோஸ் மற்றும் எலுமிச்சை நறுமணத்தை கொண்ட காதி ஹெர்பல் ஃபேஸ் வாஷ் மற்றும் பாடி வாஷை தான் அவர் பயன்படுத்துகிறார். தன் சருமத்தை பராமரிக்க அவர் பயன்படுத்தும் இவையனைத்தும் இயற்கை பொருட்களாகும்.

கூந்தல்

கூந்தல்

நம் கனவு தேவதையான வித்யா பாலன் தொடர்ச்சியாக எண்ணெய் மசாஜ் செய்து கொள்கிறார். இதனால் தன் கூந்தலை அவரால் எப்போதும் நல்ல நிலையில் பராமரிக்க முடிகிறது.

இவையே நடிகை வித்யா பாலனின் சில அழகு ரகசியங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சமநிலையுடன் கூடிய டயட், சருமம் மற்றும் கூந்தலுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு போன்றவைகள் தான் மென்மையான, மிருதுவான, குழந்தை போன்ற சருமத்திற்கு தேவையானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vidya Balan’s Beauty Secrets Revealed

Despite having heavy schedules, sleep deprivation, dehydration, she manages to keep up with all of it without any tell tale signs on her looks! Here are some of the famous Vidya Balan beauty tips that you can also follow.