தக்காளியால் உங்கள் அழகு எப்படி மேம்படுகிறது?

By: Ashok CR
Subscribe to Boldsky

உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பட்டியலிடுங்கள் என்றால், கண்டிப்பாக அதில் தக்காளிக்கு இடமிருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் காய்கறி தான் தக்காளி. அதனை சமையலில் சேர்த்தால் உணவிற்கு ருசி கொடுக்கும். சாறு நிறைந்த இந்த தக்காளியை அப்படியே கூட விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். இது மட்டுமா? இதனை சாறு எடுத்து பருகவும் கூட பலரும் விரும்புவார்கள். பழச்சாறு கடைகளில் கிடைக்கும் வெகு சில காய்கறி ஜூஸ்களில் இதுவும் ஒன்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதையெல்லாம் தாண்டி தக்காளி சூப்பும் மிகவும் பிரபலம். ஹோட்டல்களில் உள்ள மெனுக்களில் தக்காளி சூப் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது.

இப்படிப்பட்ட தக்காளியில் பலவித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனால் நாவிற்கும் மட்டும் ருசி சேராமல், உட்புற உடலுக்கும் பலவித ஆரோக்கியங்கள் கிடைக்கும். அதை பற்றி பேச வேண்டுமானால் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். சரி அவ்வளவு தான் இதன் பயன் என்றால் அது தான் இல்லை.

உங்கள் சருமத்திற்கும், அழகை மேம்படுத்துவதற்கும் இதனை பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சாறு மிக்க இந்த தக்காளிப்பழம் உங்கள் அழகின் மீது பல மாயங்களை நிகழ்த்துகிறது. அதற்கு காரணம், சரும பிரச்சனைகளை நீக்கி அதனை பளபளக்க வைத்திடும் லைகோபைன் என்ற பொருளை ஊக்குவிக்க தக்காளி உதவிடும். இதுப்போக சருமத்தை பளிச்சென, பிரகாசமாக மற்றும் இறுக்கமாக வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது. உங்கள் கூந்தலுக்கு அதனை இயற்கை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் மின்னும்.

தக்காளியினால் உங்கள் அழகு எப்படி மேம்படும் என்பதை பார்க்கலாமா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும நிறத்தை சமப்படுத்துதல்

சரும நிறத்தை சமப்படுத்துதல்

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிப்பதோடு மட்டுமல்லாது, சருமத்திற்கும் பல வகையில் உதவுகிறது தக்காளி. சொல்லப்போனால், தக்காளி சாறு அல்லது ஒரு தக்காளி துண்டை உங்கள் சருமத்தின் மீது தடவினால், உங்கள் சரும நிறம் சமப்படுத்தப்பட்டு, நாளடைவில் மின்னத் தொடங்கி விடும். தக்காளியில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், உங்கள் சருமத்தை பளிச்சிட வைக்க அது உதவிடும்.

சரும பிரச்சனைகளை நீக்கும்

சரும பிரச்சனைகளை நீக்கும்

பல சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் காண்பதற்கு தக்காளி விதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். தக்காளியில் உள்ள சில பொருட்கள், வயதை ஏற்றும் செயல்முறையை குறைக்க உதவும். அதேப்போல், இயக்க உறுப்புகளுடன் போராடவும் உதவிடும். தோல் அழற்சி மற்றும் சிரங்கு ஆகியவற்றை குறைக்க இந்த எண்ணெய் உதவிடும். பாதிக்கப்பட்ட சருமத்தை மீட்கவும் இது உதவும்.

பருக்களை குறைக்கும்

பருக்களை குறைக்கும்

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ வளமையாக உள்ளதால், பருக்களை குணப்படுத்தும் ஆயின்மெண்ட் மற்றும் கிரீம்களில் அது பயன்படுத்தப்படுகிறது. அதனால் உங்களுக்கு பருக்கள் இருந்தால், உங்கள் சருமத்தின் மீது தக்காளி சாறை நேரடியாக தடவலாம்.

சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சருமத்தை ஆற்றும்

சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சருமத்தை ஆற்றும்

தினமும் 4-5 டீஸ்பூன் தக்காளி பேஸ்ட்டை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பயன்படுத்தி வந்தால், சூரிய வெப்பத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்படலாம் என பல அழகு வல்லுனர்கள் நம்புகின்றனர். உங்கள் சருமம் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், பாதிக்கப்பட்ட இடத்தில் தக்காளியைத் தடவுங்கள்.

பொடுகை ஒழிக்கும்

பொடுகை ஒழிக்கும்

பொடுகு தொல்லை என்பது நம் தலை முடிக்கு வந்த சோதனையாகும்; குறிப்பாக குளிர் காலத்தில். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளி சாற்றை எடுத்து தலைச் சருமத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். நல்ல பலனைப் பெற வேண்டும் என்றால், இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது தடவிடுங்கள்.

சருமத்தை மென்மையாக்க தக்காளி எண்ணெய் உதவிடும்

சருமத்தை மென்மையாக்க தக்காளி எண்ணெய் உதவிடும்

சருமத்தை மென்மையாக்க, பாதிக்கப்பட்ட இடங்களில் மசாஜ் செய்ய தக்காளி எண்ணெய்யை பயன்படுத்தலாம். அப்படி மசாஜ் செய்து விட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் மசாஜ் செய்த இடத்தை கழுவுங்கள். முக க்ரீம்களிலும் ஸ்க்ரப்களிலும் கூட தக்காளி எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.

துளைகளை சுத்தப்படுத்த தக்காளி சாறு

துளைகளை சுத்தப்படுத்த தக்காளி சாறு

முகத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்த, 3-4 சொட்டு தக்காளி சாறை ஒரு டீஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து, பஞ்சுருண்டையை கொண்டு முகத்தில் தடவுங்கள். இந்த கலவையை கொண்டு உங்கள் சருமத்தின் மீது மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதே 10-15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள துளைகளின் அளவு நாளடைவில் குறையத் தொடங்கும்.

பருக்களை குறைக்க பிசைந்த தக்காளி

பருக்களை குறைக்க பிசைந்த தக்காளி

பருக்களை குறைப்பது இப்போது சுலபமாகி விட்டது. தக்காளியை பாதியாக அறுத்து, உங்கள் முகத்தின் மீது தடவும். உங்களுக்கு பருக்கள் பிரச்சனை இருந்தால், தக்காளியின் தோலை உரித்து, அதனை பிசைந்து, அந்த சாற்றை சருமத்தின் மீது தடவி அதை ஒரு மணிநேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின் முகத்தை கழுவி விட்டு காய வையுங்கள். இந்த இயற்கை பேக்கை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சூரிய ஒளியால் உண்டான கருமை நிறம் ஆகியவற்றை நீக்கலாம்.

தேனுடன் கலந்த தக்காளி சாறு

தேனுடன் கலந்த தக்காளி சாறு

மென்மையான சருமம் வேண்டும் என்றால், தக்காளி சாற்றை தேனுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பின் அப்படியே ஒரு 15 நிமிடங்கள் அதை விட்டு விடவும். பின் தண்ணீரில் அதை கழுவிக் கொள்ளவும். பளபளக்கும் மென்மையான சருமத்தை நீங்கள் பெறப் போவது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Juicy Tomatoes Can Enhance Your Beauty

Tomatoes are juicy to eat and work wonders for your beauty too. This is so because tomatoes boast of lycopene which is meant to resolve your skin’s problems and leave a glowing effect.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter