மார்பகங்களுக்கு அடியில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல்களைத் தவிர்க்க சில எளிய வழிகள்!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

பெண்களுடைய மார்பகங்களுக்குக் கீழ்ப்பகுதியில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை தான். வியர்வை, சூடு, இறுக்கமான பிரா, போதுமான காற்று உட்புகாமல் இருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த எரிச்சல் ஏற்படுகிறது.

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்...

இவை மட்டுமல்லாமல், சில பூஞ்சைகளின் தொற்றுக்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது ஏற்படும் அலர்ஜி ஆகியவையும் மார்பகங்களின் அடிப்பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. வயிற்றில் தொப்பையுள்ள பெண்களுக்கும் இந்த அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மார்பகத்தை பெரிதாக்க உதவும் உணவுகள்!!!

பெண்களுக்கு இது தாங்க முடியாத எரிச்சலாக இருக்கும். அந்த இடங்களில் தோல் உலர்ந்திருக்கும்; பயங்கர அரிப்பு ஏற்படும்; ஆக மொத்தம், இந்த எரிச்சல் அவர்களை எப்போதும் கடுப்பாகவே வைத்திருக்கும். மார்பகங்களின் அடிப்பகுதியில் ஏற்படும் இத்தகைய எரிச்சல்களைத் தவிர்ப்பதற்கு 10 எளிய வழிகளைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

எரிச்சல் ஏற்படும் மார்பகங்களின் அடிப்பகுதியில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு காட்டன் டவலில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் கட்ட வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து, ஒரு சிறு ப்ரேக் எடுத்துக் கொண்டு இதை மீண்டும் செய்ய வேண்டும். குளிர் நீரில் ஸ்கிம்-மில்க்கைக் கலந்து அந்தப் பகுதியில் தடவி வந்தாலும், எரிச்சலும் அரிப்பும் அடங்கும். குளிர் நீரில் குளிப்பது மிகமிக நல்லது.

'நோ' வியர்வை

'நோ' வியர்வை

மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வையைத் தேங்க விடவே கூடாது. போதுமான அளவு காட்டன் பஞ்சை மார்பகத்தின் கீழ்ப்பகுதியில் வைத்தால், அது வியர்வையை நன்றாக உறிஞ்சி விடும். வேண்டுமானால் டிஸ்யூ பேப்பர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வினிகர்

வினிகர்

சில சமயம் நீங்கள் அணிந்திருக்கும் உடைகளில் உள்ள வேதிப் பொருட்கள் கூட அரிப்பு மற்றும் எரிச்சல்களுக்குக் காரணமாக இருக்கலாம். இதற்கு வினிகர் ஒரு சரியான தீர்வாக அமையும். ஒரு பக்கெட் நீரில் ஒன்றரை கப் வினிகரைக் கலந்து, பிரா உள்ளிட்ட துணிகளை அந்த நீரில் துவைத்து சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின், ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அக்கலவையைத் தடவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சோள மாவு

சோள மாவு

மார்பகத்தின் கீழ்ப்பகுதிகளை சோப்பால் கழுவி, டவலால் நன்றாகத் துடைத்து, அந்த இடம் நன்றாக உலர்ந்த பிறகு சோள மாவை நன்றாகத் தடவ வேண்டும். தேவைப்பட்டால், டால்கம் பவுடருடன் சோள மாவைத் தடவிக் கொள்ளலாம். இதனால் பூஞ்சைத் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

எரிச்சல் ஏற்படும் மார்பகத்தின் அடிப்பகுதிகளில் சுத்தமான தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால், தேங்காய் எண்ணெயின் வளவளப்பான தன்மை எரிச்சலையும், தொற்றுக்களையும் வெகுவாகக் குறைக்கும்.

காலமைன் லோஷன்

காலமைன் லோஷன்

பாதிக்கப்பட்ட பகுதிகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவி, நன்றாக உலர்ந்த பின், சுத்தமான காட்டனைக் கொண்டு காலமைன் லோஷனை அப்பகுதிகளில் தடவலாம். இதனால் அரிப்பு அடங்குவதோடு விரைவான நிவாரணமும் கிடைக்கும். தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் இதைச் செய்து வரலாம்.

டீ ட்ரீ எண்ணெய்

டீ ட்ரீ எண்ணெய்

நான்கு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 6 துளி தூய்மையான டீ ட்ரீ எண்ணெயைக் கலந்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். குறிப்பாக இதை குளித்த பிறகும், மேலும் தூங்கச் செல்லும் முன்பும் செய்து வந்தால் ஒரு சில நாட்களிலேயே பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்றாகத் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இந்த ஜெல்லுடன் மஞ்சள் பவுடரை சேர்த்துக் கொண்டால் டபுள் பலன் கிடைக்கும்.

பூண்டு

பூண்டு

ஆலிவ் எண்ணெயில் பூண்டுப் பற்களை ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் அந்த எண்ணெயைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். பிறகு சில மணிநேரம் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆலிவ் எண்ணெய்க்குப் பதில், பூண்டை நன்றாக நசுக்கி அதைத் தடவினாலும் நல்லது. உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, பூஞ்சைத் தொற்றுக்களை அடித்து விரட்டி, எரிச்சலையும் அடியோடு போக்குகிறது. மூன்று ஸ்பூன் நீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, அதைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி உலர்த்த வேண்டும். நீருக்குப் பதில் தேனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்தும் தடவலாம். சுமார் 20 நிமிடங்கள் கழித்து நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இதைச் செய்து வந்தால் சில நாள்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Get Rid Of A Rash Under Breasts

A rash under the breasts is a very common problem. It is mostly a form of irritant dermatitis and is called intertrigo characterized by inflammation of skin folds. You can try some simple natural remedies to get relief from this problem. Also, consult your doctor, especially if there are signs of infection. Here are the top 10 ways to get rid of a rash under your breasts.
Story first published: Thursday, December 4, 2014, 10:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter